Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்கிற சமந்தாவின் ஆசை, ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரீஸின் மூலம் நிறைவேறியிருக்கிறது

மிஸ்டர் மியாவ்

நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்கிற சமந்தாவின் ஆசை, ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரீஸின் மூலம் நிறைவேறியிருக்கிறது

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

* ‘தடம்’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்களின் மூலம் கவனம்பெற்ற நடிகை ஸ்மிருதி வெங்கட், தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்தில் பிஸியாக இருக்கிறார். அடுத்து, கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில், தனுஷின் தங்கையாக நடிக்கிறாராம்.

* நடிகை நந்திதா தமிழ், தெலுங்கு என செம பிஸியாக இருந்தார். ‘வணங்காமுடி’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘இடம் பொருள் ஏவல்’ என இவர் நடித்த சில படங்கள் வெளியாகவில்லை. இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தாலும், சமீபகாலமாகச் சற்று கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டுவருகிறார். பொங்கலுக்கு ரிலீஸாகும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நிதி அகர்வாலுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

* நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்கிற சமந்தாவின் ஆசை, ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரீஸின் மூலம் நிறைவேறியிருக்கிறது. இந்த சீரீஸின் முதல் பாகம் பெரிதும் பேசப்பட்டதால், சமந்தா நடித்திருக்கும் இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்த சீரீஸ் வருகிற பிப்ரவரி மாதம் 12-ம் தேதி, அமேஸான் தளத்தில் வெளியாகவிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

* மிகக் குறைந்த காலத்தில் டோலிவுட் டாப் ஹீரோயின் லிஸ்ட்டில் இடம்பிடித்தவர், ராஷ்மிகா மந்தனா. தமிழில் இவர் அறிமுகமாவதற்கு முன்னரே இவருக்கான ரசிகர் மன்றங்கள் உருவாகின. தற்போது, ‘மிஷன் மஜ்னு’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாக நடிக்கும் இந்தப் படம் உளவுத்துறையை மையப்படுத்தி இருக்கும் என்கிறார்கள்.

* ஜோதிடத்தை மிகவும் நம்பும் மிதுன ராசிக்காரரான ஆங்கர் பாவனா ஜோதிடம் பார்க்கவும் செய்வார் என்றால் நம்புகிறீர்களா? நிஜம்தான். முறைப்படி ஆஸ்ட்ராலஜி படித்திருக்கிறார் பாவனா. ஐபிஎல் தொகுத்து வழங்கியபோது இதைத் தெரிந்துகொண்ட சிலர், ‘எந்த டீம் ஜெயிக்கும்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லு தாயி’ என்றெல்லாம் கேட்டு ரவுசு பண்ணிவிட்டார்களாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உஷ்...

மிருகத்தனமாக அறிமுகமான நடிகரும், டார்லிங் நடிகையும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவிவந்தது. இருவரும் இரண்டு படங்கள் இணைந்து நடித்திருந்த நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த நடிகருடைய வீட்டு விசேஷ புகைப்படங்களில் அந்த நடிகையைப் பார்க்க முடியும். நல்ல நேரம் வரும்போது நல்ல செய்தி சொல்லலாம் என இருவரும் காத்திருக்கிறார்களாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism