Published:Updated:

மிஸ்டர் மியாவ் - ரங்கம்மா பாட்டி

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

பாரம்பர்ய நெல் ரகங்களைக் காக்கப் போராடி மரணித்த நெல் ஜெயராமனுக்கு, கடைசி கால மருத்துவச் செலவை முழுதாக ஏற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

மிஸ்டர் மியாவ் - ரங்கம்மா பாட்டி

பாரம்பர்ய நெல் ரகங்களைக் காக்கப் போராடி மரணித்த நெல் ஜெயராமனுக்கு, கடைசி கால மருத்துவச் செலவை முழுதாக ஏற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

எம்.ஜி.ஆர் தொடங்கி வடிவேலு வரை தலைமுறைகளாக, துணை நடிகையாக நடித்த ரங்கம்மா பாட்டி, இப்போது படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். கடைசி காலத்தில் நடிப்பு வாய்ப்பு இல்லாமல் சென்னை மெரினா கடற்கரையில் அவர் கர்சீஃப் விற்க, அந்த வேதனைக் காட்சி ஆன்லைனில் வைரலானது. அதனால் வியாபாரத்தை நிறுத்திவிட்ட ரங்கம்மா பாட்டி, உடல்நிலை சரியில்லாததால், தான் பிறந்த தெலுங்குப்பாளையம் கிராமத்துக்கே போய்விட்டார். “இதுகாலம் வரைக்கும் யார்கிட்டயும் நான் உதவி கேட்டதே இல்லை. என்னோட நிலைமை நடிகர் லாரன்ஸ் கவனத்துக்குப் போனால் போதும்… அந்தப் புள்ள எனக்கு வேண்டியதை நிச்சயம் செய்யும்” என நெருங்கியவர்களிடம் கலங்கியிருக்கிறார் ரங்கம்மா பாட்டி!

பாரம்பர்ய நெல் ரகங்களைக் காக்கப் போராடி மரணித்த நெல் ஜெயராமனுக்கு, கடைசி கால மருத்துவச் செலவை முழுதாக ஏற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதோடு நிற்காமல், நெல் ஜெயராமன் மகனின் கல்விச் செலவையும் அவரே ஏற்று, வருடந்தோறும் தவறாமல் அனுப்பிவைக்கிறார். அவருக்கு பதில் நன்றி காட்டும்விதமாக, இந்த வருட நெல் திருவிழாவை அவர் தலைமையில் நடத்தத் திட்டமிட்டு வருகிறார்கள் ஜெயராமன் குடும்பத்தினர்!

உயிருக்கும், உடல்ரீதியான பாதிப்புகளுக்கும் காரணமாக அமையக்கூடிய மரபணு மாற்றப்பட்ட உணவுகளின் ஆபத்துகளை விளக்கித் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தில், தயக்கமின்றி கையெழுத்து போட்டிருக்கிறார் நடிகர் கார்த்தி. “ஒவ்வாமை தொடங்கி புற்றுநோய் பாதிப்புகள் வரை உருவாக்கக்கூடிய மரபணு மாற்ற உணவுகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் பெருக எல்லோரும் கைகோப்போம்” எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றிவிழாவில் அறிவித்தபடி, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி ‘உழவன் ஃபவுண்டேஷன்’ நிறுவி வருடம்தோறும் வேளாண்மையில் புதுமை நிகழ்த்தும் விவசாயிகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்திவருகிறார் கார்த்தி!

மிஸ்டர் மியாவ் - ரங்கம்மா பாட்டி
மிஸ்டர் மியாவ் - ரங்கம்மா பாட்டி

பிடித்தவர்களுக்கு இன்ஸ்டன்ட் பரிசு கொடுத்து அசத்துவதில், நீண்டகாலம் பணியாற்றுபவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதில், நன்றி மறக்காத தன்மையில் நயன்தாராவை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. அப்பேர்ப்பட்ட அம்மணி சமீபத்தில் செய்த காரியம் என்ன தெரியுமா? இதுவரை வாழ்வில், தான் நன்றிக்கடன் பட்டிருப்பவர்களாக ஒரு பெரிய லிஸ்ட் எழுதி விக்னேஷ் சிவன் கையில் கொடுத்து, ‘நம் திருமணத்துக்கு இவர்கள் அனைவரையும் அழைக்கணும்’ எனச் சொல்லியிருக்கிறாராம். அதிலிருக்கும் யாரும் வி.ஐ.பி வகையறாக்கள் இல்லை என்பதுதான் கவனிக்கத்த விஷயம்!

உஷ்....

ஸ்ட்ராங்கான படத்தின் பின்னணி இசைக்கு, தன்னை நீக்கிவிட்டு வேறு இசையமைப்பாளரைப் போட்டதில் இசை வாரிசுக்குக் கோபமே இல்லையாம். “அவங்க கேட்ட நேரத்துல என்னால பண்ணிக்கொடுக்க முடியலை. அவங்களும் எவ்வளவு காலம்தான் பொறுப்பாங்க? தவறு என் மேலதான்!” என நெருங்கியவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறாராம் இசை வாரிசு. #ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது!