அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஐஸ்வர்யா ராஜேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஐஸ்வர்யா ராஜேஷ்

படப்பிடிப்பு முழுதும் முடிவடைந்து வெளியாகவிருக்கும் தன் 50-வது படமான ‘மஹா’வைப் பெரிதும் நம்பியுள்ளார் ஹன்சிகா.

* ‘பூமிகா’, ‘திட்டம் இரண்டு’, சசிகுமாருடன் ‘முந்தானை முடிச்சு’ ரீமேக், தெலுங்கில் நானியுடன் ‘டக் ஜெகதீஷ்’ என அடுத்தடுத்து ஐஸ்வர்யா ராஜேஷின் கைவசம் படங்கள் உள்ளன. இந்தநிலையில், புதிய படமொன்றை கமிட் செய்திருக்கிறார் ஐஸ். ‘டிரைவர் ஜமுனா’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய கின்ஸ்லின் இயக்குகிறார். இதில் டாக்ஸி டிரைவர் வேடமாம்!

* ‘காலா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அஞ்சலி பாட்டீல், அடுத்ததாக தமிழில் ‘குதிரைவால்’ படத்தில் கலையரசனுடன் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் கடற்கரையில் நடத்திய பிகினி ஷூட் சமூக வலைதளங்களில் செம வைரல்.

* குஷ்பு தயாரித்து சன் டி.வி-யில் ஒளிபரப்பான சீரியல் ‘நந்தினி.’ இதன் பார்ட் 2-வை தற்போதைய அரசியல் சூழலில் ஒளிபரப்ப சன் டி.வி நிர்வாகம் மறுத்துவிட்டதாகவும், அதைத் தொடர்ந்து ஜீ தமிழ் சேனலில் அந்த சீரியல் ஒளிபரப்பாகலாம் என்றும் தகவல்கள் வருகின்றன. ஆனால், ஜீ தமிழ் தரப்போ இந்தத் தகவல் வெறும் யூகம் என்கிறது!

ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்

* படப்பிடிப்பு முழுதும் முடிவடைந்து வெளியாகவிருக்கும் தன் 50-வது படமான ‘மஹா’வைப் பெரிதும் நம்பியுள்ளார் ஹன்சிகா. முழுக்கப் பெண் மையக் கதாபாத்திரத்தில் அதில் நடித்திருப்பதால், இந்தப் படத்துக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இதேபோல நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை நோக்கி நகரலாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.

உஷ்...

முன்னணி நடிகர்களை ஒருமையில் பேசியும் திட்டியும் வந்த ஷாம்பூ நடிகை, தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தன்னைத் தானே பெருமையாகப் பேசிக்கொள்ளும் இவரை, சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரோல் செய்கிறார்கள். சமீபத்தில் தைப்பூசத்தை அரசு விடுமுறையாக அறிவித்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி சொன்னவர், கூடவே இயக்குநர் அரசியல் வாதியின் பெயரை அடைமொழியோடு அழுத்திச் சொல்லியிருக்கிறார். அம்மணிக்கு அரசியல் ஆசை இருக்கும்போல!