Published:Updated:

மிஸ்டர் மியாவ் - பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே
பிரீமியம் ஸ்டோரி
பூஜா ஹெக்டே

சில நாள்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழையால், பழுதடைந்த சாலைப் பள்ளத்தில் சிக்கி இறந்தார் சமூகப் பணியாளர் பாலசுப்ரமணியன்.

மிஸ்டர் மியாவ் - பூஜா ஹெக்டே

சில நாள்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழையால், பழுதடைந்த சாலைப் பள்ளத்தில் சிக்கி இறந்தார் சமூகப் பணியாளர் பாலசுப்ரமணியன்.

Published:Updated:
பூஜா ஹெக்டே
பிரீமியம் ஸ்டோரி
பூஜா ஹெக்டே

அரசியல் விஷயங்களைக் கடந்து, ‘இனி தீவிர சினிமா’ என இறங்கிவிட்டார் கருணாஸ். தற்போது ‘சல்லியர்கள்’ என்கிற படத்தைத் தயாரித்து, அதில் நடிக்கவும் செய்யும் கருணாஸ் அடுத்து ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் ‘ஆதார்’ என்கிற படத்தில் நடிக்கிறார். காவல் நிலையத்தில் வெறுமையும் வேதனையுமாக கருணாஸ் கைக்குழந்தையோடு அமர்ந்திருக்கும் காட்சி ஃபர்ஸ்ட் லுக்காக வெளியாக, இயக்குநர்கள் பாரதிராஜா, பார்த்திபன், வெற்றிமாறன், சசிகுமார் எனப் பலரிடமிருந்தும் பாராட்டு மழை.

கார்த்தி ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடிக்கும் அதிதி ஷங்கர், பட ரிலீஸுக்கு முன்னரே ‘கொரோனா குமாரு’ படத்தில் சிம்புவுடன் சேர்ந்து நடிக்க கமிட்டாகிவிட்டார். கிராமத்துக்குச் சம்பந்தமே இல்லாத அதிதி, தேனி வட்டார வசனங்களை அட்டகாசமாகப் பேசி கிராமத்துப் பெண்ணாகவே மாறியதும், ‘சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட்’ என முதல் பட ஷூட்டிங்கிலேயே வாங்கிய நற்பெயரும்தான் அடுத்த படம் அமையக் காரணமாம்.

மிஸ்டர் மியாவ் - பூஜா ஹெக்டே
மிஸ்டர் மியாவ் - பூஜா ஹெக்டே
மிஸ்டர் மியாவ் - பூஜா ஹெக்டே

சில நாள்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழையால், பழுதடைந்த சாலைப் பள்ளத்தில் சிக்கி இறந்தார் சமூகப் பணியாளர் பாலசுப்ரமணியன். இந்த விஷயம் ‘ஜெய் பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேலை ரொம்பவே வருத்த, சமீபத்தில் நடந்த படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டாராம். இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு அல்லாடும் அந்தத் தாய்க்கு ஞானவேல் ஆறுதல் சொல்ல, “அரசு நிர்வாகம் சரியா இருந்திருந்தால் இந்த இறப்பே நடந்திருக்காது. ஆனா, அதிகாரிகள் இந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கலை. நீங்க வந்ததில் ரொம்ப நிம்மதி சார்…” என நெகிழ்ந்துபோயிருக்கிறார்கள் குடும்பத்தினர்.

‘புஷ்பா’ படம் இவ்வளவு விமர்சனங்களைக் கடந்து தமிழ்நாட்டில் பட்டையைக் கிளப்பக் காரணம், சமந்தா ஆடிய ஒற்றைப் பாடல்தான் என்கிறார்களாம் தியேட்டர் முதலாளிகள். இதனால் சமந்தா மார்க்கெட் தமிழில் ரொம்பவே எகிறத் தொடங்கியிருக்கிறது. ‘ஒரு பாட்டு… 2 கோடி ரேட்டு’ என நீள்கிற அழைப்புகளும் அதிகமாகிவிட்டனவாம். ஆனாலும், ‘இனி ஒற்றைப் பாடலுக்கு ஆடும் திட்டம் இல்லை’ எனத் தெளிவாகச் சொல்லிவிட்டாராம் சமந்தா.

உஷ்...

மிருகப் படத்தின் ரிலீஸ் தேதியைத் தயாரிப்பாளரோ, ஹீரோவோ அறிவிக்காத நிலையில், படத்தின் காமெடி நடிகர், ‘ஏப்ரல் 14 ரிலீஸ் உறுதி’ என சேனல் பேட்டியில் உறுதியாகச் சொல்ல, படக்குழுவுக்குக் கொலைவெறியாம். ‘இயக்குநரின் நண்பர்’ என்பதால் பிரகாச நிறுவனத்தின் கண்டனத்துக்கு ஆளாகாமல் தப்பித்திருக்கிறார் அந்த காமெடி நடிகர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism