அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

தமிழில் அடுத்தடுத்து படங்கள் அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கும் நிதி, கிளாமராகவும் ஹோம்லியாகவும் போட்டோ ஷூட் நடத்திவருகிறார்.

* ‘அருவி’ பட நடிகை அதிதி பாலனுக்கு, தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் நடித்து முடித்த இவர், தற்போது ப்ரித்விராஜுடன் ‘கோல்டு கேஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருக்குப் பத்திரிகையாளர் கேரக்டராம்.

* வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியிருந்த பாரதிராஜா, படப்பிடிப்பு நடக்கும் சத்தியமங்கலத்தில் குளிர் வாட்டி வதைத்ததால், படத்திலிருந்து விலகிவிட்டார். இப்போது அந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருக்கிறார். இதனால், படத்தின் கிராஃப் எகிறி, விஜய் சேதுபதி நடிக்கும் வெற்றிமாறன் படமாக இண்டஸ்ட்ரியைத் தெறிக்கவிட்டிருக்கிறது!

மிஸ்டர் மியாவ்

* நடிகை அம்மு அபிராமி நாயகியாகவும், குணச்சித்திர கதாபாத்திரமாகவும் பல படங்களில் நடித்துவருகிறார். ‘அசுரன்’ தனுஷுக்கு ஜோடியாக நடித்த இவர், அதன் தெலுங்கு ரீமேக்கான ‘நாரப்பா’விலும் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். முதலில் அந்த கேரக்டரில் அமலா பால்தான் நடிப்பதாக இருந்ததாம்.

* இந்தியில் தனது கரியரை ஆரம்பித்த நடிகை நிதி அகர்வால், தெலுங்கில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்தார். தமிழில் ‘பூமி’ தான் அவர் கமிட்டான முதல் படம் என்றாலும், சிம்புவுடன் நடித்த ‘ஈஸ்வரன்’ படமும் ஒரே நாளில் வெளியானது. இதையடுத்து, தமிழில் அடுத்தடுத்து படங்கள் அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கும் நிதி, கிளாமராகவும் ஹோம்லியாகவும் போட்டோ ஷூட் நடத்திவருகிறார்.

உஷ்...

நடிகையின் பெயர்கொண்ட சென்னையின் பிரபல தியேட்டர் ஒன்று, ‘மாஸ்டர்’ படத்தில் முதல் நாளில் மட்டும் ஒன்றரைக் கோடி ரூபாய் கல்லா கட்டியதாம். இதனால் மால்களில் தியேட்டர்வைத்திருக்கும் அதிபர்கள் தரப்பு, “எங்களுக்கு மட்டும் ஏகப்பட்ட கண்டிஷனைப் போட்டுட்டு, அந்த தியேட்டரை மட்டும் இப்படிச் சம்பாதிக்க விடலாமா?” என்று காதில் புகை வராத குறையாகப் புலம்பு கிறார்களாம்!