அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ் - திவ்ய பாரதி

திவ்ய பாரதி
பிரீமியம் ஸ்டோரி
News
திவ்ய பாரதி

‘சண்டக்கோழி 2’ படத்துக்கு அடுத்தபடியாக ராம் பொத்னேனியை வைத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இறங்குகிறார் இயக்குநர் லிங்குசாமி.

ஆறு வருடங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரத்தை மறந்து, கமலோடு கைகோத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ‘தாக்குதல் நடத்தியது கமல் ரசிகர்கள்தான்’ என போலீஸ் விசாரணையில் தெரிந்தபோதே, இரு தரப்புக்குமான மோதலாக அந்த விவகாரம் மாறத் தொடங்கியது. ஆனால், அப்போதைக்குப் பேட்டி கொடுத்து அதைப் பெரிதாக்காமல் சாதுர்யமாகக் கடந்தார் சிவகார்த்திகேயன். தற்போது சோனி நிறுவனமும், கமலும் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு, இதுவரை வாங்கியிராத பெரிய சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்!

‘சண்டக்கோழி 2’ படத்துக்கு அடுத்தபடியாக ராம் பொத்னேனியை வைத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இறங்குகிறார் இயக்குநர் லிங்குசாமி. இன்னொரு ஹீரோவாக ஆதியையும் இறக்கியிருக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் பக்கா ஆக்‌ஷன் மசாலாவாக உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு ‘தி வாரியர்’ எனத் தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதையடுத்து லிங்குசாமி - விஷால் கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்!

மிஸ்டர் மியாவ் - திவ்ய பாரதி
மிஸ்டர் மியாவ் - திவ்ய பாரதி
மிஸ்டர் மியாவ் - திவ்ய பாரதி

பல காலமாக மனவருத்தம், மோதல் என்றே நிலவிவந்த தனுஷ்-ஐஸ்வர்யா ஒருவழியாகப் பிரிந்திருக்கிறார்கள். அடுத்தடுத்த உயரங்களை நோக்கி ஓடும் தனுஷ், குடும்பம், கடன் எனப் பல நெருக்கடிகளுக்கு ஆளாகிவந்தார். ஐஸ்வர்யா மீது மரியாதை குறையாதவராகத் தன் வேலைப்பளு குறித்து விளக்கம் சொல்லிவந்தார். ஒருசில பிரச்னைகளின்போது ரஜினியே தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்துவைத்தார். ஆனாலும், தொடர்ந்து மனவருத்தம் நீடித்த நிலையில், இருவரின் விலகல் முடிவுக்கு ரஜினியும் ஓகே சொல்லிவிட்டாராம்!

‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்துக்கு எதிராகக் கிளம்பிய விமர்சனங்கள், அஸ்வின் தரப்பை ரொம்பவே யோசிக்கவைத்திருக்கின்றன. ஆடியோ வெளியீட்டில் அஸ்வின் காட்டிய அலப்பறையும், வாய்த்துடுக்கான பேச்சும்தான் படத்துக்கு எதிராக மாறியதாகப் பலரும் சொல்கிறார்கள். ஆனால் படக்குழுவோ, “சினிமாவில் தலைகாட்டுவதற்கு முன்னரே அஸ்வினுக்கு மிகப்பெரிய அளவில் ஃபேன்ஸ் உருவானது பல ஹீரோக்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால், திட்டமிட்டு, அஸ்வின் பேச்சைச் சர்ச்சையாக்கி ஆன்லைன் லாபி மூலமாகப் படத்தை வீழ்த்தியிருக்கிறார்கள்” என்கிறார்கள் ஆவேசமாக!

உஷ்...

உச்ச நடிகரின் அடுத்த படத்தை ‘வைத்திய’ டைரக்டர்தான் இயக்கப்போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. பிரகாச நிறுவனம் பேமென்ட் குறித்துக் கேட்க, நான்கு விரல் களைக் காட்டினாராம் இயக்குநர். ‘இவ்வளவு கம்மியா கேட்கிறாரே’ என நிறுவனம் சிலிர்க்க, ‘நான் கேட்டது 40 சி’ என்றாராம் இயக்குநர். உச்ச நடிகருக்கே உதறல் எடுத்துவிட்டதாம். #வேட்டை மன்னன்னா சும்மாவா?!