Published:Updated:

மிஸ்டர் மியாவ்

 ரைசா
பிரீமியம் ஸ்டோரி
ரைசா

போலீஸ் அதிகாரியாக ஆரி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

போலீஸ் அதிகாரியாக ஆரி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்கிறார்.

Published:Updated:
 ரைசா
பிரீமியம் ஸ்டோரி
ரைசா

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் த்ரிஷா. படத்தில், கமிட்டானதிலிருந்து தன் பாத்திரத்துக்காகப் பல விஷயங்களைச் செய்துவருகிறார். குதிரையேற்றப் பயிற்சியை மேற்கொண்டவர், எப்போதும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படித்தவண்ணம் இருக்கிறாராம். பொதுவாகவே, வரலாற்றுக் கதைகள்மீது அதிக ஆர்வம்கொண்டவர் த்ரிஷா. அதனாலேயே தன்னை, குந்தவை கதாபாத்திரத்தில் பொருத்திக்கொள்ள அதிகம் மெனக்கெடுகிறார்.

மிஸ்டர் மியாவ்

`பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வெளிவந்த ஒரு சில நாள்களில் புதிய படமொன்றை கமிட் செய்திருக்கிறார் நடிகர் ஆரி. போலீஸ் அதிகாரியாக ஆரி நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்கிறார். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த அமின் இயக்குகிறார்.

‘புத்தம் புது காலை’, ‘பாவக் கதைகள்’ என ஆரம்பித்து அடுத்தடுத்து பல ஆந்தாலஜி கதைகள் தமிழில் வரத் தொடங்கிவிட்டன. பாலிவுட்டில் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’போல, தமிழில் காமத்தை மையமாகவைத்து புதிய ஆந்தாலஜி படமொன்று உருவாகவிருக்கிறது. ப்ரித்வி ஆதித்யா, ஹரீஷ், கார்த்திகேயன், வாலி மோகன்தாஸ் ஆகிய நான்கு இயக்குநர்கள் இணைந்து இயக்கும் படத்தில் ஸ்ரீகாந்த், இனியா, சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

லாக்டெளன் முடிந்தவுடன், இந்திய சினிமாவின் பெரும்பாலான ஹீரோயின்கள் மாலத்தீவுக்கு வெகேஷனுக்காகச் சென்று வந்தனர். அதோடு மட்டுமல்லாமல், அங்கிருந்து அவர்கள் பதிவிடும் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் ஹாட் டாபிக்காக இருந்தன. ஹீரோயின்கள் வரிசையில் ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு, ரைசா மாலத்தீவுக்கு ட்ரிப் அடித்துள்ளார். அங்கிருந்து அவர் பதிவிட்ட ‘ரெட் ஹாட் பிகினி’ புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. தற்போது, ‘தி சேஸ்’, ‘FIR’, ‘காதலிக்க யாருமில்லை’, ‘ஆலிஸ்’ ஆகிய படங்கள் ரைசாவின் கைவசம் இருக்கின்றன.

உஷ்...

`பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பல ஜோடிகள் திருமணம் செய்திருக்கிறார்கள். சென்ற வருடம், மலையாள `பிக் பாஸி’ன் முதல் சீஸனில்கூட இருவர் திருமணம் செய்துகொண்டனர். அப்படி, தமிழ் `பிக் பாஸ்’ நான்காவது சீஸனில் கலந்துகொண்ட ஒரு ஜோடி, விரைவில் திருமணச் செய்தியை அறிவிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். ஆனால், ஷோவில் இது கொஞ்சம்கூட வெளிப்படாமல் பார்த்துகொண்டார்கள் இருவரும். இருவரின் பெயரையே சொன்னாலும்கூட இவர்களா என்று நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்!