Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மாளவிகா மோகனன் - ஸ்ருதி ஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
மாளவிகா மோகனன் - ஸ்ருதி ஹாசன்

விஜய்யின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் ‘மாஸ்டர்’ நடிகை மாளவிகா மோகனன்.

மிஸ்டர் மியாவ்

விஜய்யின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் ‘மாஸ்டர்’ நடிகை மாளவிகா மோகனன்.

Published:Updated:
மாளவிகா மோகனன் - ஸ்ருதி ஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
மாளவிகா மோகனன் - ஸ்ருதி ஹாசன்

* தமிழ்நாட்டின் மூத்த தயாரிப்பாளர்கள் பலரையும் கொரோனா தாக்கியிருப்பதால், கலக்கத்தில் இருக்கிறது கோடம்பாக்கம். இளம் ஹீரோக்கள் எல்லோரும் கொரோனாவுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே இருக்க, தயாரிப்பாளர்கள் மட்டும் ஆபீஸுக்குப் போவதும் வருவதுமாக இருந்ததோடு, தேர்தல் சம்பந்தமாகப் பலரையும் சந்தித்ததுதான் கொரோனா பரவலுக்குக் காரணம் என்கிறார்கள். தமிழ்நாட்டின் மிக மூத்த தயாரிப்பாளரும் கொரோனாவால் அவதிப்பட்டுவருகிறாராம்.

ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்

* விஜய்யின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் ‘மாஸ்டர்’ நடிகை மாளவிகா மோகனன். இதுவரை விஜய் தன்னுடைய ஃபேவரைட் உணவாக தோசையைச் சொல்லிவந்த நிலையில், ‘தயிர் சாதம்தான் விஜய்யின் ஃபேவரைட்’ என எக்ஸ்க்ளூசிவ் தகவல் பகிர்ந்திருக்கிறார் மாளவிகா. ‘விடியற்காலை 4 மணிக்கெல்லாம் தூங்கி எழுந்துவிடும் விஜய், என்னுடைய 4 மணி நண்பர்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல், இந்த கொரோனா சூழலைவைத்து ‘கொரோனா குமார்’ என்ற படத்தை எடுக்கவிருக்கிறார். இதற்காக ஹோட்டலில் தங்கி கதை, திரைக்கதை எழுதிவரும் கோகுல், ‘ஊரடங்கு முடியும் நேரத்தில் கதை முழுவதுமாகத் தயாராகிவிடும்’ என்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நட்புக்காகத் தலைகாட்டுவாராம். ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

* மும்பையில் கொரோனா பரவல் அதிகமானதைத் தொடர்ந்து ஹைதராபாத்துக்கு வீடு மாறிக் குடியேறிவிட்டார் ஸ்ருதி ஹாசன். சென்னையிலும் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதால்தான் ஹைதராபாத்தைத் தேர்ந்தெடுத்தாராம். பகலில் முழுவதுமாகத் தூங்கிவிட்டு, இரவில் அமெரிக்க நண்பர்களுடன் வீடியோ சாட்டிங், பாட்டு, சோஷியல் மீடியா ஸ்டேட்டஸ்கள் என இரவுப் பறவையாக வாழ்ந்துவருகிறார் ஸ்ருதி.

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

* ‘துருவ நட்சத்திரம்’, ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா-2’ என கையில் மூன்று படங்கள் வைத்திருக்கும் கெளதம் மேனன், ஓ.டி.டி நிறுவனங்களுக்காகவும் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார். ஏற்கெனவே வெற்றிமாறன், சுதா கோங்ரா, விக்னேஷ் சிவன் ஆகியோரோடு இணைந்து நெட்ஃபிளிக்ஸுக்காக ஆந்தாலஜி படம் இயக்கியிருக்கும் கெளதம், அமேஸான் பிரைமுக்காக அடுத்து ஒரு பெரிய புராஜெக்ட்டில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இது வெப்சீரிஸாக இருக்காது என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism