Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஐஸ்வர்யா தத்தா
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா தத்தா

படங்கள்: என்.ஜி.ஆர் நந்தா

மிஸ்டர் மியாவ்

படங்கள்: என்.ஜி.ஆர் நந்தா

Published:Updated:
ஐஸ்வர்யா தத்தா
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா தத்தா

தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ ரிலீஸ் என கம்பீரமாக அறிவித்துவிட்டது தயாரிப்புத் தரப்பு. ஆனால், ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியிருக்கின்றனவாம். தற்போது அமெரிக்காவில் சிகிச்சையிலிருக்கும் ரஜினி, அடுத்த மாதம் பேலன்ஸ் வொர்க்கை முடித்துக்கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்ததால், நம்பிக்கையோடு ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டார்கள். ‘தியேட்டர் ரிலீஸ்’ என அறிவிக்கப்பட்டதை ரஜினி ரசிகர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் கொண்டாடுகிறார்கள்.

சினிமா
படப்பிடிப்புகள் நடத்த, தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடனேயே விஜய்யின் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார்கள். ஜார்ஜியாவில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை சென்னையில் செட் போட்டுக் கடகட வேகத்தில் ஷூட் செய்கிறார்கள். மூன்றாம் அலை வருவதற்குள் ஷூட்டிங்கை முடிக்கச் சொல்லி விஜய் சொன்னதால்தான் இந்த வேகமாம்!

‘யூத்தான
லவ் சப்ஜெக்ட் எதுவுமே எனக்கு அமையலையே…’ என வருந்தும் ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பக்கா கவர்ச்சி காட்டத் தயார்’ என அறிவிக்காத குறையாக ஸ்டில் ஷூட் நடத்திக் காட்டினார். இதையடுத்து, சமீபகாலமாக வருகிற கதைகள் அம்மணியின் ஆசைக்குத் தீனி போடும்விதமாக, இளமை பொங்க இருக்கின்றனவாம். ‘யூத்தான ஹீரோக்களை கதாநாயகனாகப் போடுங்க’ என்பதுதான் அம்மணியின் அடுத்த கோரிக்கையாம்!

கொரோனா
நெருக்கடியையும் துயரத்தையும் கடந்து, அட்டகாசமான கதை ஒன்றை எழுதியிருக்கிறார் ராஜூ முருகன். நகைச்சுவையும் நையாண்டியுமான கதையை உடனடியாக ஓகே செய்திருக்கிறது ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம். இதற்கிடையில் ஒரு வெப் சீரீஸ் கதையையும் பெரிய நிறுவனம் ஒன்றில் சொல்லி `சபாஷ்’ வாங்கியிருக்கிறார் ராஜூ முருகன்.

அடுத்த
ஒரே மாதத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தை முடித்துவிட்டு, சூர்யாவுடனான ‘வாடிவாசல்’ படத்தைத் தொடங்க நினைத்தார் இயக்குநர் வெற்றிமாறன். கைவசமிருக்கும் ஐந்து படங்களை அப்படியே ஒத்திவைத்துவிட்டு, வெற்றிமாறனுக்கு உடனே தேதி கொடுத்திருக்கும் தனுஷ், தன் படத்தை முதலில் முடித்துக் கொடுக்கும்படி கேட்கிறாராம். அடுத்து சூர்யாவா, தனுஷா என்கிற திண்டாட்டத்தில் இருக்கிறார் வெற்றிமாறன்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

சமீபத்திய இன்ஸ்டா படங்களில், செம ஜில் காஸ்ட்யூமில் பளபளக்கிறார் ஐஸ்வர்யா தத்தா. ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தில் அறிமுகமாகி, நல்ல வாய்ப்புகளுக்காகப் போராடிக்கொண்டிருந்த ஐஸ்வர்யாவின் கையில் ‘அலேகா’, ‘கன்னித்தீவு’, ‘பப்ஜி கேம்’, ‘மிளிர்’, ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ எனப் பெரிய லிஸ்ட்டே உள்ளது. ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் இந்தப் படங்களால் அம்மணி ரொம்பவே குஷியாக இருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

உஷ்…

மிகக் குறைந்த பட்ஜெட்டில், வீரியமான தலைவரைப் பற்றிப் படமெடுத்த இளம் இயக்குநருக்கு நல்ல வரவேற்பு. அதேநேரம், கடந்த காலத்தில் சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட ஆபாசமான பதிவுகளை சிலர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைரலாக்க, இயக்குநருக்கு ஏக தலைவலி. ஆளும்தரப்பும் ஆத்திரத்தில் இருப்பதால், தன் இருப்பிடத்தைக்கூட ரகசியமாகவே வைத்திருக்கிறார் இயக்குநர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism