அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஷில்பா மஞ்சுநாத்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷில்பா மஞ்சுநாத்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ரெடியாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா, சமந்தா என விஜய் சேதுபதிக்கு இரண்டு பேர் ஜோடி

மம்மூட்டியை வைத்து ‘பேரன்பு’ படத்தை இயக்கிய இயக்குநர் ராம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு மலையாள ஹீரோவை வைத்துப் படம் இயக்கப்போகிறார். அவர், நிவின் பாலி! சமீபத்தில் ராம் கதை சொல்ல, “என் நடிப்புக்குத் தீனி போடும் பாத்திரம். அடுத்த மாதமே தேதி கொடுக்க நான் தயார்” என்று சொன்னாராம் நிவின் பாலி. தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் படத்தை இயக்கவிருக்கிறார் ராம்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ரெடியாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா, சமந்தா என விஜய் சேதுபதிக்கு இரண்டு பேர் ஜோடி. ‘தி ஃபேமிலிமேன் 2’ சர்ச்சைகளுக்குப் பிறகு சமந்தா கையில் இருக்கும் ஒரே படம் இதுதான். அதனால், கதை கேட்கும் படலத்தைத் தீவிரமாக்கத் தொடங்கியிருக்கிறார் சமந்தா. ‘சர்ச்சையான கதைகளுக்கு முன்னுரிமை’ என்கிறாராம்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘இஸ்பேட் ராஜாவின் இதய ராணி’யாகத் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ‘பெங்களூரு ராணி’ ஷில்பா மஞ்சுநாத். முதல் லாக்டௌனுக்கு முன்னர் கமிட்டாகி நடித்து முடித்த ‘தேவதாஸ் பிரதர்ஸ்’ தவிர, வேறு எந்தப் படத்திலும் கமிட்டாகாவில்லை. கொரோனா முடிந்தால், தனக்கான இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் ஷில்பா.

‘அருவி’ பட இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின் அடுத்த படம் ‘வாழ்.’ ``இந்தப் படத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் அவார்டு அள்ளணும். அதுதான் இந்தப் படத்துக்கான வெற்றி” எனப் படத்தின் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் சொல்ல, மொத்தக் குழுவுக்கும் ஏக மகிழ்ச்சி. ‘வாழ்’ பட ஷூட்டிங் குறித்தும், இயக்குநர் அருண் குறித்தும் பகத் பாசிலிடம் சிவகார்த்திகேயன் சிலாகிக்க, ‘அவருடைய அடுத்த படத்தில் நடிக்க நான் ரெடி’ என்றாராம் பகத்.

‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யுடன் கைகோத்த பூஜா ஹெக்டே இப்போது செம பிஸி. மகேஷ் பாபு, பவன் கல்யாண் என முன்னணி நடிகர்களின் படங்களில் வரிசையாகக் கமிட்டாகிவரும் பூஜா ஹெக்டே, சம்பளத்தையும் மூன்று கோடியாக உயர்த்திவிட்டார். இதற்கிடையில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தெலுங்கில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்திலும் பூஜா ஹெக்டேதான் ஜோடியாம். அம்மணி காட்டில் அடைமழை.

உஷ்...

கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வில் சீட் கேட்டுக் கிடைக்காத வருத்தத்திலிருந்த மதுரைக்கார செழிப்பான ஃபைனான்ஸியர், ‘முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணையத் தயார்’ எனத் தகவல் அனுப்பினாராம். ஒரு மாதம் ஆகியும் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லையாம். காரணம் விசாரித்தபோது, ‘உளவுத்துறை நோட் வைத்திருக்கிறது’ என்றார்களாம்!