* ட்விட்டர் டிரெண்டிங்கில் மீண்டும் ஓவியா! லாக்டெளன் ஆரம்பித்ததிலிருந்து சத்தமில்லாமல் இருந்தார் ஓவியா. திடீரென சமீபத்தில் அவர், ‘ட்விட்டரில் என்ன நடக்கிறது?’ என்று ஸ்டேட்டஸ் போட, விஜய் - அஜித் ரசிகர்கள் அதற்கு ‘ஏ’டாகூட ரிப்ளைகள் போட, ஓவியாவும் இறங்கி வந்து, ‘அடல்ட்ஸ் ஒன்லி’ கமென்ட்டுகளை அடிக்க... படுசூடாகத் தெறிக்கிறது ட்விட்டர் வட்டாரம்.

* ‘நாயகன்’ முடித்த காலத்திலிருந்தே ‘பொன்னியன் செல்வன்’ படத்தை எடுக்க வேண்டும் என்பது இயக்குநர் மணிரத்னத்தின் கனவு. ஒருவழியாக ‘லைகா’ நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. இடையே கொரோனா வந்தது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்போது லைகா நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக் கிறதாம். அதனால், இந்தப் படம் மீண்டும் எப்போது ஆரம்பிக்கும் என்பது விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது.

* கொரோனாவுக்கு முன்பாக சுமார் 75 சதவிகித ஷூட்டிங்கை முடித்துவிட்ட படங் களுக்கு மட்டும் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஷூட்டிங்கைத் தொடங்க அனுமதியளிக்கும் திட்டத்தைப் பரிசீலித்து வருகிறதாம் தமிழக அரசு. ஒருவேளை அப்படி அனுமதி அளிக்கப்பட்டாலும், ‘இண்டோரில் மட்டுமே ஷூட்டிங்; ஸ்பாட்டில் 60 பேருக்கு மட்டுமே அனுமதி’ போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுமாம்.

* ‘அண்ணாத்த’ படத்துக்கு அடுத்து ‘சிறுத்தை’ சிவா யாரை இயக்கப்போகிறார் என்று கோலிவுட்டில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சூர்யாவுக்கு ஏற்கெனவே கதை சொல்லி ‘ஓகே’ வாங்கியிருக்கிறார் சிவா. ஆனால் ஹரி, வெற்றிமாறன் படங்களையெல்லாம் முடித்த பிறகுதான் சூர்யா வர முடியும். இதனால், விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருக்கிறாராம். ‘அண்ணாத்த’ படத்தைத் தயாரிக்கும் சன் டி.வி-தான் விஜய்யின் அடுத்த படத்தையும் தயாரிக்கவிருக்கிறது. எனவே, சிவா அடுத்து `விஜய் படத்தை இயக்கவே வாய்ப்புகள் அதிகம்’ என்கிறது கோலிவுட் வட்டாரம்.

* பிக் பாஸ் சீஸன் - 3 நிகழ்ச்சி செப்டம்பரில் தொடங்கவிருக்கிறது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கமல்ஹாசன் ‘ஓகே’ சொல்லிவிட்டாராம். பொதுவாக, கமல்ஹாசன் பங்குபெறும் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், கொரோனா பீதியால் இந்த சீஸனில் பார்வையாளர்களுக்கு `நோ என்ட்ரி’ போட்டிருக்கிறார்கள். இப்போது போட்டியாளர் தேர்வு நடக்கிறது. போட்டியாளர் ஒவ்வொருவருக்குமே கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு, அதன் பிறகே பிக் பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்களாம்.