Published:Updated:

மிஸ்டர் மியாவ்

யாஷிகா ஆனந்த்.
பிரீமியம் ஸ்டோரி
யாஷிகா ஆனந்த்.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமிதான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கக்கூடும் எனப் பரவலாக செய்தி அடிபடுகிறது.

மிஸ்டர் மியாவ்

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமிதான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கக்கூடும் எனப் பரவலாக செய்தி அடிபடுகிறது.

Published:Updated:
யாஷிகா ஆனந்த்.
பிரீமியம் ஸ்டோரி
யாஷிகா ஆனந்த்.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியான ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் பரவலான வரவேற்பையும், அதற்கு நிகரான விமர்சனங்களையும் சந்தித்தது. படத்தின் மீதக் காட்சிகளை ஹைதராபாத்தில் ஷூட் செய்த படக்குழு, இன்னொரு ஃபைட்டுக்காக ஐரோப்பிய நாடுகளில் இடம் பார்த்துக்கொண்டிருக்கிறது. கொரோனா நெருக்கடி இல்லாத இடமாகப் பார்த்து ஒரு மாதத்துக்குள் ஷூட்டிங்கை முடிக்கச் சொல்லியிருக்கிறாராம் தயாரிப்பாளர் போனி கபூர்.

கார்த்தியின் ‘சர்தார்’ படத்தைத் தயாரிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்‌ஷ்மண், சசிகுமாரை வைத்து அடுத்த படத்துக்கு பூஜை போட்டிருக்கிறார். நாட்டு மாடுகளை மையப்படுத்தும் கதையை, பக்கா கிராமப் பின்னணியில் படமாக்கவிருக்கிறார்கள். சண்டைப் பயிற்சியாளர்களாகப் பணியாற்றும் அன்பறிவ்தான் டைரக்‌ஷன். அதனால், படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பஞ்சமில்லையாம்.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமிதான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கக்கூடும் எனப் பரவலாக செய்தி அடிபடுகிறது. ‘இனிவரும் காலங்களில் நடிப்பையும் குறைத்துக்கொள்ளப்போகிறேன்’ என மன்ற நிர்வாகிகளிடம் பேசிய ரஜினி, தேசிங்கின் கதையை ஏற்கெனவே ஓகே செய்துவைத்திருந்தாராம். இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ் உள்ளிட்ட இன்னும் சில இயக்குநர்களின் பெயர்களும் ரஜினியின் பரிசீலனைப் பட்டியலில் இருக்கின்றனவாம்.

எவ்விதச் சர்ச்சையிலும் சிக்கிக்கொள்ளாமல் எஸ்கேப் ஆவதில் த்ரிஷா வல்லவர். சைக்கிளிங் போவதுபோல் ட்விட்டரில் த்ரிஷா ஒரு புகைப்படத்தை வெளியிட, ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வைச் சூசகமாகக் கண்டித்துத்தான் த்ரிஷா சைக்கிளில் செல்வது போன்ற படத்தைப் பதிவிட்டார்’ எனப் பரபரப்பாக, அம்மணி பதறிப்போய்விட்டார். ‘சாதாரணமாகப் பதிவிட்ட படம்தான்’ என நெருக்கமானவர்களிடம் அவர் விளக்கம் கொடுக்க, ‘கடந்த வாரம் சன்னி லியோன் வெளியிட்ட சைக்கிள் படமே பெரிய சர்ச்சையை உருவாக்கியது. அது தெரிந்தும் ஏன் இந்த வேலை?’ என அம்மணிக்கு அட்வைஸ் மழை பொழிகிறதாம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் பிஸியாக இருக்கும் சமுத்திரக்கனி, ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தையும் ஏ.எல்.விஜய்யின் ‘தலைவி’ படத்தையும் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வைச் சொல்லும் ‘தலைவி’ படத்தில், சமுத்திரக்கனிக்கு ஆர்.எம்.வீரப்பன் பாத்திரமாம். பின்னணி அரசியல் சக்தியாக இருந்து ஆட்டுவிக்கும் பாத்திரத்தில் அசத்தியிருக்கிறாராம்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

இன்ஸ்டாவில் கிளுகிளு ஸ்டில்ஸால் இளசுகளைக் கிறங்கடிக்கிறார் யாஷிகா ஆனந்த். லாக்டௌனுக்கு முன்னரே சில படங்களில் நடித்து முடித்துக் கொடுத்துவிட்டாலும், ஹீரோயின் சென்ட்ரிக்கிலும் சிக்ஸர் அடிக்க ரெடியாகிறார். யாஷி கைவசம் ‘ராஜபீமா’, ‘பாம்பாட்டம்’, ‘சல்பர்’ என ஒரு லிஸ்ட்டே இருக்கிறது.

உஷ்…

வரி ஏய்ப்பு விஷயத்தில், நீதிமன்றத்திடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்ட நடிகர், தனக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கியவர்களை வறுத்தெடுத்துவிட்டாராம். ‘கூடவே இருந்து உசுப்பேற்றும் ஒரு சிலரால்தான் என் மகனுக்கு இவ்வளவு பிரச்னை. இனியாவது அந்தக் கூட்டத்தை விலக்கிவைக்க வேண்டும்’ என நொந்து புலம்புகிறாராம், மகனோடு பல மாதங்களாகப் பேசாமல் இருக்கும் தந்தை இயக்குநர். #கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி!