அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

‘பொன்னியின் செல்வன்’ தொடங்கு வதற்குள் அமேஸானுக்காக ஒரு பெரிய புராஜெக்ட்டுக்கு கமிட் ஆகியிருக்கிறார் மணிரத்னம்.

* நடிகைகள் இடையே, லாக்டெளன் ஸ்பெஷலாக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவது யார் என்ற போட்டி அதிகரித்திருக்கிறது. இதில் லேட்டஸ்ட்டாக பச்சை கலர் வேட்டியோடு ‘மாஸ்டர்’ நடிகை மாளவிகா மோகனன் தனது போட்டோவை அப்லோடு செய்ய, ஒரே நாளுக்குள் மூன்று லட்சங்களைத் தாண்டி லைக்ஸ் எகிறிக்கொண்டிருக்கின்றன.

* `பிக் பாஸ்’ புகழ் மீரா மிதுனின் போஸ்ட்டுகளால் கலவரமாகிறது சோஷியல் மீடியா. ‘த்ரிஷா என்னைப் பார்த்து காப்பி அடிக்கிறார்’ என்றவர் இப்போது, ‘ரஜினி, விஜய் எல்லாம் என்னுடைய புகழைக் கெடுக்கிறார்கள். அவர்கள்மீது வழக்குத் தொடர்வேன்’ என்றெல்லாம் ட்வீட் போட, ‘’அப்படி என்னதாம்மா உனக்குப் பிரச்னை’’ என்று அலுத்துக்கொள்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

* பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து தான் வெளியேற்றப்பட்டதில் ரொம்பவே அப்செட்டாக இருந்தார் இளையராஜா. `இனி இளையராஜா எங்கே இசையமைப்பார்’, `எங்கே இயங்குவார்’ என எல்லோரும் கேட்டுக்கொண்டேயிருக்க... சத்தமே இல்லாமல் கோடம்பாக்கத்திலுள்ள எம்.எம்.ப்ரிவியூ தியேட்டரை வாங்கியிருக் கிறார் இளையராஜா. வரும் செப்டம்பரி லிருந்து ‘ராஜா ஸ்டூடியோ’ இங்கிருந்து இசைப் பயணத்தைத் தொடங்குமாம்!

* ‘பொன்னியின் செல்வன்’ தொடங்கு வதற்குள் அமேஸானுக்காக ஒரு பெரிய புராஜெக்ட்டுக்கு கமிட் ஆகியிருக்கிறார் மணிரத்னம். நெட்ஃபிளிக்ஸுக்காக வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கோங்ரா, விக்னேஷ் சிவன் என நான்கு இயக்குநர்கள் சேர்ந்து ஆந்தாலஜி படம் எடுப்பதுபோல அமேஸானுக்காக மணிரத்னம், கெளதம் மேனன், பிஜாய், அரவிந்த்சாமி, சித்தார்த் உட்பட ஒன்பது பேர், ஒன்பது குறும்படங்களை இயக்கவிருக் கிறார்கள். படத்துக்கு ‘நவரசம்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. மணிரத்னம் தயாரிக்க, சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.

 மீரா மிதுன்
மீரா மிதுன்

* அமிதாப் பச்சன் குடும்பம் கொரோனாவில் சிக்கியதையடுத்து பாலிவுட் வட்டாரம் பயங்கர ஷாக் ஆகியிருக்கிறது. ஆரம்பத்தில், `அவருடைய வீட்டுப் பணியாளர்கள் மூலமாகப் பரவியிருக்கும்’ என்று தகவல் பரப்பப்பட்டது. ஆனால், `மொத்தம் 26 பணியாளர்களுக்கும் கொரோனா இல்லை’ என்று டெஸ்ட் ரிசல்ட் வந்துவிட்டது. இதையடுத்து, ‘‘நடிகர்கள் பலரும் அலுவலகங்களைத் திறந்து வைத்துள்ளனர். இரவுநேர ‘உற்சாகச் சந்திப்பு’களும் நடக்கின்றன. கொரோனா பரவலுக்கு இது காரணமாக இருக்கலாம்’’ போன்ற பேச்சுகள் மும்பையில் எதிரொலிக்கின்றன. இந்நிலையில், ஷாரூக், சல்மான் எனப் பலரும் தங்கள் அலுவலகங்களை முழுவதுமாக மூடச் சொல்லிவிட்டார்கள். ‘மும்பையில் கொரோனாவின் தீவிரம் குறையும்வரை வீட்டைவிட்டு நடிகர்கள் யாரும் வெளியே வர வேண்டாம்’ என இந்தி நடிகர்கள் சங்கமும் கோரிக்கை விடுத்திருக்கிறது.