Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ராஷி கண்ணா
பிரீமியம் ஸ்டோரி
ராஷி கண்ணா

இந்தியில் பெரிய ஹிட் அடித்த ‘பதாய் ஹோ’ படத்தைத் தமிழில் இயக்கி நடிக்கவிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி

மிஸ்டர் மியாவ்

இந்தியில் பெரிய ஹிட் அடித்த ‘பதாய் ஹோ’ படத்தைத் தமிழில் இயக்கி நடிக்கவிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி

Published:Updated:
ராஷி கண்ணா
பிரீமியம் ஸ்டோரி
ராஷி கண்ணா

மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங் இழுத்துக்கொண்டே போகிறது. ஷங்கரின் ‘இந்தியன் 2’ சர்ச்சையாகி, சட்டப் போராட்டத்தில் நிற்கிறது. ஆனாலும், சுபாஷ்கரனின் லைக்கா நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட படங்களைத் தொடர்ந்து தயாரிக்கவிருக்கிறது. பா.ம.க-வைச் சேர்ந்த ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன், டி.வி சேனல்களில் பணியாற்றிய அனுபவஸ்தர் கண்ணன் உள்ளிட்ட நால்வர்தான் தீவிரமாகக் கதை கேட்கிறார்களாம். முதல் பிரதி அடிப்படையில் படங்களை ஒப்படைக்கவும் முன்னணி இயக்குநர்களிடம் பேசிவருகிறது லைக்கா நிறுவனம்.

‘சூரரைப் போற்று’ பட ஷூட்டிங்கின்போதே அஜித்துக்காக அட்டகாசமான கதையை ரெடி செய்திருந்தார் இயக்குநர் சுதா கொங்கரா. ‘சுதா மேடம் அஜித் சாருக்கு ரெடி செய்திருக்கும் கதையைக் கேட்டு மிரண்டுபோனேன். அவ்வளவு பிரமாதமான கதை’ என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் ஓப்பன் பேட்டி கொடுத்தார். ஆனாலும், அஜித் தரப்பிலிருந்து சுதாவுக்கு அழைப்பு இல்லை. ரொம்ப காலம் காத்திருந்து பார்த்த சுதா, இப்போது ‘சூரரைப் போற்று’ படத்தை இந்தியில் எடுக்கக் கிளம்பிவிட்டார். அக்‌ஷய் குமாரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.

போலீஸ் பயிற்சி குறித்த தெளிவான பார்வையோடு வந்திருக்கும் ‘டாணாக்காரன்’ டீசருக்கு நல்ல வரவேற்பு. ‘அசுரன்’ படத்தில் குரூர வில்லனாக நடித்த தமிழ்தான் இந்தப் படத்தின் இயக்குநர். போலீஸ் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிய தமிழ், தீவிர சினிமா ஆசையில் உதவி இயக்குநர், நடிகர், இயக்குநர் என முன்னேறியிருக்கிறார். ‘விடுதலை’ பட ஷூட்டிங்கில் சூரிக்கு போலீஸ்காரரின் உடல்மொழியைக் கற்றுக் கொடுக்க தமிழை நியமித்திருக்கிறார் வெற்றிமாறன். ‘போலீஸ் கதைகளில் ‘டாணாக்காரன்’ மிக முக்கியமான படமாக இருக்கும்’ என்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’, ஆர்யாவுடன் ‘அரண்மனை 3’ படங்களை முடித்திருக்கும் ராஷி கண்ணா, கார்த்தியுடன் ‘சர்தார்’ படத்தில் நடித்துவருகிறார். அரைகுறைத் தமிழில் உரையாடும் ராஷி கண்ணாவுக்கு நன்கு தமிழ் கற்க அவ்வளவு ஆசை. அதற்காகத் தனி ஆசிரியர் ஒருவரை நியமித்தார். ஆனாலும், அது சாத்தியப்படவில்லை. அதனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் பலருடனும் வலிய பேசி தமிழ்ப் பயிற்சி எடுத்துவருகிறார்.

மிஸ்டர் மியாவ்

இந்தியில் பெரிய ஹிட் அடித்த ‘பதாய் ஹோ’ படத்தைத் தமிழில் இயக்கி நடிக்கவிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. படத்தில் வரும் இன்னொரு முக்கியப் பாத்திரத்துக்கு சத்யராஜை அணுகினார்கள். கதை பிடித்தாலும் வேறு சில விஷயங்களில் சத்யராஜ் சங்கடமாக, இப்போது மோகன்லாலை அணுகியிருக்கிறார்கள். அவருக்கு ‘பதாய் ஹோ’ படம் மிகவும் பிடிக்குமாம். அதனால் சம்பள சம்பிரதாயங்களையெல்லாம் கடந்து, உடனே ஓகே சொன்னாராம். ‘வலிமை’ படத்தை முடித்த கையோடு, இந்தப் பட ஷூட்டிங்கைத் தொடங்கச் சொல்லியிருக்கிறாராம் தயாரிப்பாளர் போனி கபூர்.

உஷ்…

காமெடிக்கு கியாரன்டியான இயக்குநருக்கு இப்போது இறங்கு முகம். சேனல் ஒன்றுக்குச் செய்த படமும் செம ஃப்ளாப். அதனால் மனிதர் ரொம்பவே சோர்ந்துபோயிருக்க, ஆளுங்கட்சியின் வாரிசு நடிகர் நம்பிக்கையூட்டி சில கம்பெனிகளைக் கைகாட்டினாராம். ‘என் சினிமா என்ட்ரிக்கு நம்பிக்கை கொடுத்தவர் அவர்’ என அந்த கம்பெனிகளிடம் நடிகர் சொல்ல, நெகிழ்ந்துபோனாராம் இயக்குநர். # ஓகே ஓகே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism