Published:Updated:

மிஸ்டர் மியாவ்

‘கொரோனா விழிப்புணர்வு படம் எடுக்கிறோம்’ என அனுமதி வாங்கி, சில படங்களின் படப்பிடிப்பு நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி

* மீண்டும் தமிழ் சினிமாவில் பிஸியாகியிருக்கிறார் நடிகை மஞ்சிமா மோகன். விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’, ஜீவா, அருள்நிதியுடன் ‘களத்தில் சந்திப்போம்’, விஷ்ணு விஷாலுடன் ‘எஃப்.ஐ.ஆர்’ என மஞ்சிமா மோகனின் நடிப்பில் மூன்று படங்கள் 2020 ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

* எப்போதுமே பண நெருக்கடியிலிருக்கும் உதவி இயக்குநர்களின் நிலை கொரோனா சூழலில் இன்னும் மோசமாகியிருக்கிறது. ‘மாஸ்டர்’, ‘வலிமை’ எனப் பெரிய படங்களில் பணிபுரிந்துவரும் உதவி இயக்குநர் களுக்கான சம்பளத்தை அந்தந்தத் தயாரிப்பு நிறுவனங்கள்தான் கொடுத்துவந்தன. ஆனால், இப்போதைய சூழலில் அடுத்தடுத்த மாதச் சம்பளத்தைத் தருவது கஷ்டம் என நிறுவனங்கள் கைவிரிக்க, வேறு புராஜெக்ட்டுக்கும் செல்ல முடியாமல், இதையும் முடித்துக் கொடுக்க முடியாமல் உதவி இயக்குநர்கள் தவிக்கிறார்கள்.

 ஸ்வரா பாஸ்கர்
ஸ்வரா பாஸ்கர்

* ‘கொரோனா விழிப்புணர்வு படம் எடுக்கிறோம்’ என அனுமதி வாங்கி, சில படங்களின் படப்பிடிப்பு நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பாதி முடிந்த நிலையிலிருக்கும் சின்ன பட்ஜெட் படங்கள் சிலவற்றின் ஷூட்டிங், இந்த வகையில் ஸ்டூடியோவுக்குள் நடக்க ஆரம்பித்திருப்பதாகக் கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். பணக் கஷ்டத்திலிருக்கும் சில பிரபல நடிகர்களும் இந்த ஷூட்டிங்குகளில் கலந்துகொள்வதாகத் தகவல்.

* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லம்போகினி காரை ஓட்டுவதுபோன்று வெளியான புகைப்படம்தான் சமீபத்திய ஆன்லைன் வைரல். கொரோனா காரணமாக, கேளம்பாக்கம் பண்ணை இல்லத்தில் தங்கியிருக்கும் ரஜினிகாந்த்தை அவரின் மகள் சௌந்தர்யாவும் மருமகன் விசாகனும் சந்திக்கச் சென்றிருந்தனர். அப்போதுதான் விசாகனின் ‘லம்போகினி உருஸ்’ காரை டெஸ்ட் டிரைவ் செய்திருக்கிறார் ரஜினி. இந்தக் காரின் சென்னை ஆன் ரோடு விலை ஐந்து கோடி ரூபாய்.

இந்நிலையில், ‘தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், அத்தியவசிய தேவைக்கு மட்டுமே வெளியில் செல்லவேண்டும். அதிலும், சென்னை மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கு (கேளம்பாக்கம்) ரஜினி உள்ளிட்டோர் சென்றது எப்படி?’ என்று இந்த விஷயம் சர்ச்சையாகவும் மாறியுள்ளது.

மஞ்சிமா மோகன் - டாப்ஸி
மஞ்சிமா மோகன் - டாப்ஸி

* இந்தித் திரையுலகில் நிலவும் சில ஸ்டார்களின் அதிகார அத்துமீறல், நடிகைகளுக்கு வழங்கப்படும் குறைந்த சம்பளம், நெபடிஸம் (Nepotism), குரூப்பிஸம் ஆகியவற்றுக்கு எதிராக கங்கனா ரனாவத்தோடு சேர்ந்து நடிகைகள் டாப்ஸியும், ஸ்வரா பாஸ்கரும் பேச ஆரம்பிக்க, அவர்கள்மீது சோஷியல் மீடியாவில் கடுமையான தாக்குதல்களை நடத்திவருகிறார்கள் சில நடிகர்கள், இயக்குநர்களின் ஆதரவாளர்கள். ஆனாலும் கங்கனா, டாப்ஸி, ஸ்வரா மூவருமே எந்த பயமும் இல்லாமல், துணிச்சலுடன் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகிறார்கள். இதற்கிடையே கங்கனாவுக்கும் டாப்ஸிக்கும் இடையிலேயே நெபடிஸம் குறித்து உரசல் ஏற்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு