Published:Updated:

மிஸ்டர் மியாவ்

சிம்ரன்
பிரீமியம் ஸ்டோரி
சிம்ரன்

முழுக்க முழுக்க நாஸ்டால்ஜியா போஸ்ட்டுகளால் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையை லட்சக்கணக்கில் கூட்டிக்கொண்டிருக்கிறார் சமந்தா

மிஸ்டர் மியாவ்

முழுக்க முழுக்க நாஸ்டால்ஜியா போஸ்ட்டுகளால் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையை லட்சக்கணக்கில் கூட்டிக்கொண்டிருக்கிறார் சமந்தா

Published:Updated:
சிம்ரன்
பிரீமியம் ஸ்டோரி
சிம்ரன்

* விக்ரம் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். ‘பேட்ட’ இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம். இது அவரது 60-வது படமாக இருக்கும் என்பதுடன், இந்தப் படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் விஜய் சேதுபதியும் நடிக்கவிருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் விக்ரமின் ‘கோப்ரா’, ‘துருவ நட்சத்திரம்’ என இரண்டு படங்கள் ரிலீஸுக்காக வெயிட்டிங்கில் இருக்கின்றன.

* முழுக்க முழுக்க நாஸ்டால்ஜியா போஸ்ட்டுகளால் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையை லட்சக்கணக்கில் கூட்டிக்கொண்டிருக்கிறார் சமந்தா. தான் பல்லாவரம் கான்வென்ட் ஸ்கூலில் படித்தபோது பெற்ற புராகிரஸ் ரிப்போர்ட் கார்டுகளை வெளியிட்டு, ‘என் மார்க்குகளைப் பாரீர்...’ எனப் பெருமை போஸ்ட்டுகளைப் போட, இன்ஸ்டாகிராமில் கமென்ட்டுகள் தெறிக்கின்றன. இதில் ஹைலைட்டாக சமந்தாவின் டீச்சர், ‘‘நல்ல ஸ்டூடன்ட்... சமந்தா இந்த ஸ்கூலோட சொத்து’’ என ரிப்போர்ட் எழுதியிருக்க, ‘‘ஸ்கூலோட சொத்து மட்டுமா...’’ என உருகுகிறார்கள் ரசிகர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி-2’ படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகள் செம வேகத்தில் நடக்கின்றன. ‘சந்திரமுகியாக நடிக்கப்போவது யார்?’ என்ற சஸ்பென்ஸ் மட்டும் நீண்டுகொண்டே போகிறது. இடையில், ‘ஜோதிகாவுக்கு பதில் சிம்ரன் நடிக்கிறார்’ எனச் சிலர் கொளுத்திப்போட, கடுப்பாகிவிட்டார் சிம்ரன். ‘‘இந்தப் படத்துக்காக யாரும் என்னை அணுகவில்லை. தவறான செய்திகளைப் பரப்பாதீர்கள்’’ என்று கொந்தளித்திருக்கிறார் சிம்ரன். ‘நயன்தாரா ஓகே சொல்வாரா?’ எனக் காத்திருக்கிறது ‘சந்திரமுகி-2’ யூனிட்.

* ‘பிக்பாஸ் சீசன்-4,’ ‘இந்தியன்-2,’ ‘தலைவன் இருக்கின்றான்’ என மூன்றுமே கமல்ஹாசனின் தேதிகளுக்காக வெயிட்டிங். ‘‘ஜூலை வரை அமைதியாக இருங்கள். அதன் பிறகு ஷூட்டிங் போவது பற்றியெல்லாம் முடிவெடுக்கலாம். அவசரம் வேண்டாம்’’ என்பதுதான் கமலின் பதிலாம்.

சிம்ரன்
சிம்ரன்

* ‘பொன்மகள் வந்தாள்’ படத்தால் ஓ.டி.டி நிறுவனம் நல்ல லாபம் அடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்ப்பதற்காகவே பல லட்சம் பேர் அமேஸான் பிரைமை சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்களாம். ‘‘5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை அமேஸானுக்கு 5 கோடிக்கும், விஜய் டி.வி-க்கு 1.5 கோடிக்கும் விற்று லாபம் பார்த்துவிட்டது சூர்யாவின் 2டி’’ என்பது கோடம்பாக்கத் தகவல்.