Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

‘மெர்சல்’ படத்தில் ஏற்பட்ட இழப்புக்கு பதிலீடாக, தேனாண்டாள் நிறுவனத்துக்கு ஒரு படம் செய்துதருவதாக ‘மாஸ்டர்’ படத்தின்போதே சொல்லியிருந்தாராம் விஜய்.

மிஸ்டர் மியாவ்

‘மெர்சல்’ படத்தில் ஏற்பட்ட இழப்புக்கு பதிலீடாக, தேனாண்டாள் நிறுவனத்துக்கு ஒரு படம் செய்துதருவதாக ‘மாஸ்டர்’ படத்தின்போதே சொல்லியிருந்தாராம் விஜய்.

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘அண்ணாத்த’ படத்துக்கு அடுத்தபடியாக நடிக்க, இதுவரை ஏழு பேரிடம் கதை கேட்டிருக்கிறாராம் ரஜினி. ஆனால், அவர் நினைப்புக்கு ஏற்றவிதத்தில் கதைகள் ஏதும் சிக்கவில்லையாம். இனியும் இளமையாக, ஸ்டைலாக பந்தா காட்டும் பாத்திரங்கள் வேண்டாம் என்பதை வெளிப்படையாகச் சொல்லி, இந்த வயதிலும் தான் செய்யக்கூடிய விதத்தில் கதைகள் இருந்தால் சொல்லச் சொல்லுங்கள் என நெருக்கமான வட்டாரத்தில் சொன்னாராம். இந்த எண்ணத்துக்கு ஏற்றபடி கதைகள் வைத்திருப்பவர்கள் போயஸ் கார்டன் கதவைத் தட்டலாம் என்கிறார்கள்!

மிஸ்டர் மியாவ்

வம்சி இயக்கத்தில், விஜய்யின் 66-வது படத்தைத் தெலுங்குப் படவுலகின் பிரமாண்ட புள்ளி தில் ராஜூ தயாரிக்கப்போவதாக அறிவித்தார். இதற்கு, ‘ஆம்’, ‘இல்லை’ என எந்த பதிலையும் விஜய் சொல்லவில்லை. ‘மெர்சல்’ படத்தில் ஏற்பட்ட இழப்புக்கு பதிலீடாக, தேனாண்டாள் நிறுவனத்துக்கு ஒரு படம் செய்துதருவதாக ‘மாஸ்டர்’ படத்தின்போதே சொல்லியிருந்தாராம் விஜய். சொன்ன வாக்கை விஜய் நிச்சயம் நிறைவேற்றுவார் என நினைக்கிறார் ‘தேனாண்டாள்’ முரளி. அதேநேரம் நேரடித் தெலுங்குப் படத்தில் விஜய் இறங்கினால் தெலுங்கு, தமிழ் என இரட்டிப்பு வசூலை அள்ளலாம் எனக் கணக்கு போடுகிறார் தில் ராஜூ. யார் கனவு பலிக்கிறதோ?!

மிஸ்டர் மியாவ்

மீண்டும் அஜித் - போனி கபூர் - ஹெச்.வினோத் கூட்டணியை உருவாக்க தீவிரமாகத் திட்டமிடுகிறார்கள். ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ இரண்டு படங்களுக்கும் சேர்த்துப் பேசப்பட்ட 100 கோடி சம்பளத்தை கொரோனா நெருக்கடி நேரத்திலும் மிச்சம் வைக்காமல் கொடுத்துவிட்டாராம் போனி கபூர். அதனால், மீண்டும் அதே கூட்டணியில் படம் செய்ய நினைக்கிறார். ஆனால், அஜித் பிடிகொடுக்கவில்லை. அதேநேரம் ஹெச்.வினோத்துடன் அஜித் மீண்டும் இணைவது உறுதியென்பதால், இயக்குநர் ரூட்டில் அடுத்த முயற்சியைத் தொடர்கிறார் போனி கபூர்!

மிஸ்டர் மியாவ்

நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்டது. நீளமான முடி வளர்த்து வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கும் சூர்யா, இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய நற்பெயரைப் பெற்றுத்தரும் என நம்புகிறார். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது இந்த மாதிரி அழுத்தமான கதைகளில் நடிக்க வேண்டும் என உறுதி எடுத்திருக்கிறாராம். அந்த அளவுக்கு இயக்குநர் த.செ.ஞானவேலின் கதையும் வசனமும் சூர்யாவுக்குப் பிடித்துப்போய்விட்டனவாம்!

மிஸ்டர் மியாவ்

சிவகார்த்திகேயன் - அலியா பட் கூட்டணியை உருவாக்க சில வருடங்களுக்கு முன்னரே தமிழில் முயற்சி நடந்தது. ‘ரெமோ’ படத்தின்போது இந்தியில் அலியா பட் செம பிஸியாக இருந்ததால், அம்மணியால் அப்போது தேதி கொடுக்க முடியவில்லை. இப்போதும் அலியா பிஸியாகத்தான் இருக்கிறார். ஆனாலும், சிவாவுடன் ஜோடி போடும் வாய்ப்பு அமைந்தால் தேதி ஒதுக்கத் தயார் என இப்போது மீடியேட்டர்களுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறாராம். இந்த வருடமே இருவரும் இணைந்து நடிப்பதற்கான அறிவிப்பு வெளியானாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள்.

உஷ்...

பிரமாண்ட இயக்குநரின் தயாரிப்பில் உச்சபட்ச ஒல்லி நடிகர் நடித்த இரண்டு படங்களும் செம ஹிட். அதற்கு பிரமாண்ட தயாரிப்பாளரின் புரொமோஷன் வித்தைகளும் காரணம். ஆனாலும், ‘அவர் தயாரிக்கும் படத்தில் இனி நடிக்க மாட்டேன்’ என நெருங்கியவர்களிடம் அடித்துச் சொல்கிறாராம் ஒல்லி நடிகர். அதேநேரம் காரணம் கேட்பவர்களிடம் ‘கப்சிப்’பாகவே இருக்கிறாராம். மர்மம் புரியாமல் மண்டையைப் பிய்த்துக்கொள்கிறார்கள் கோலிவுட்டில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism