Published:Updated:

மிஸ்டர் மியாவ்: சிவகார்த்திகேயன் அப்டேட்ஸ்

சிவகார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவகார்த்திகேயன்

கொரோனாவில் அருண் ராஜா காமராஜ் மனைவி மரணிக்க, துடித்துப்போன சிவா பலர் தடுத்தும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

‘டாக்டர்’ படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. ‘அயலான்’ படம் ஷூட்டிங் முடிந்து, கிராபிக்ஸ் பணிகள் நடக்கின்றன. ‘டான்’ படம் ஷூட்டிங்கில் இருக்கிறது. ‘அருவி’ அருண் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘வாழ்’ படமும் ரிலீஸுக்குத் தயார். நடிப்பு, தயாரிப்பு என சிவகார்த்திகேயன் கையில் இப்போது நான்கு படங்கள் இருக்கின்றன.

“சிவகார்த்திகேயனின் தந்தையான ஜெயிலர் ஜெயப்பிரகாஷை மதவாதிகள்தான் கொலை செய்தார்கள்” என சமீபத்தில் கொஞ்சமும் ஆதாரமற்ற குற்றச்சாட்டைச் சொன்னார் பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா. சிவகார்த்திகேயனின் அப்பா பெயர் தாஸ். இவரும் சிறைத்துறையில் பணியாற்றியவர்தான். கொலைசெய்யப்பட்ட ஜெயிலர் ஜெயப்பிரகாஷுக்கும் சிவகார்த்திகேயன் தந்தைக்கும் சம்பந்தமே இல்லை. இதற்கு சிவகார்த்திகேயன் கடுமையான பதிலடி கொடுக்கப்போகிறார் எனச் சமூக வலைதளங்கள் பட்டிமன்றம் நடத்த, எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அமைதியானார் சிவா. ‘அப்பா விஷயம் அரசியலாக மாறுவதை அவர் விரும்பவில்லை’ என்கிறார்கள் உடனிருப்பவர்கள்.

பல வருட நண்பன் அருண்ராஜா காமராஜ் திரைத்துறையில் போராட, அவருக்காகவே ‘கனா’ படத்தைத் தயாரித்தார் சிவகார்த்திகேயன். அடுத்து உதயநிதியை வைத்து ஷூட்டிங், விஜய்க்குக் கதை என அருண் ராஜா முன்னேற, ரொம்பவே சந்தோஷமடைந்தார் சிவா. கொரோனாவில் அருண் ராஜா காமராஜ் மனைவி மரணிக்க, துடித்துப்போன சிவா பலர் தடுத்தும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

பாரம்பர்ய நெல் ரகங்களைக் காக்கப் போராடியவர் நெல் ஜெயராமன். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, அப்போலோவில் சேர்த்து சிகிச்சைக்கான மொத்தச் செலவையும் ஏற்றுக்கொண்டார் சிவகார்த்திகேயன். நெல் ஜெயராமன் இறந்த நிலையில், அவர் மகனுடைய முழுப் படிப்புச் செலவையும் சிவகார்த்திகேயனே தற்போது செய்துவருகிறார்.

மிஸ்டர் மியாவ்: சிவகார்த்திகேயன் அப்டேட்ஸ்

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் நெல்சன், சிவகார்த்திகேயனுக்கு மிக நெருங்கிய நண்பர். அதனால் அவர் பேச்சைத் தட்டமுடியாமல், விஜய் படத்தில் ஓர் அட்டகாசப் பாடலை எழுதியிருக்கிறார் சிவா. இந்நிலையில், ‘தல படத்துக்கும் ஒரு பாட்டு எழுதுங்க தலைவா’ என அஜீத் ரசிகர்கள் ஆன்லைனில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் சந்தித்துப் பேசுகிற அளவுக்கு அஜீத்துடன் நெருக்கம் பாராட்டுகிறார் சிவகார்த்திகேயன்.

‘டான்’ படத்துக்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயனை இயக்கப்போவது யார் என்கிற கேள்வி இப்போதே பரபரப்பாகிவிட்டது. அஜீத் படத்தை இயக்கும் ஹெச்.வினோத் தொடங்கி பாண்டிராஜ் பெயர்வரை அடிபடுகிறது. பாண்டிராஜ் சொன்ன கதையை ஏற்கெனவே டிக் அடித்து வைத்திருக்கிறாராம் சிவா. ஆனால், அதில் அவருக்குக் குணச்சித்திரப் பாத்திரம்தானாம். ஹெச்.வினோத் பொலிட்டிகல் லைன் ஒன்றைச் சொல்லியிருக்கிறாராம்.

சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா ‘கனா’ படத்தில் ஒரு பாடல் பாடி வைரல் ஆனார். அதன் பிறகு பாடவும் நடிக்கவும் ஆராதனாவுக்குப் பல வாய்ப்புகள் வந்தபோதும், கையெடுத்துக் கும்பிட்டு மறுத்துவிட்டார் சிவா. சிறப்புச் செய்தி: விரைவில் இரண்டாவது குழந்தைக்குத் தகப்பனாகப் போகிறார் சிவகார்த்திகேயன்.

முதல்வரின் நிவாரண நிதிக்கு 25 லட்சம் கொடுத்த சிவகார்த்திகேயன், நடிகர் சங்கத்துக்குத் தனியே ஒரு லட்சம் கொடுத்திருக்கிறார். இதற்கிடையில், தனிப்பட்ட விதத்தில் யார் கவனத்தையும் எட்டாத வகையில் பலருக்கும் கல்வி மற்றும் மருத்துவ உதவிகளைச் சத்தமின்றிச் செய்துவருகிறார்.