Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பூஜா ஹெக்டே
பிரீமியம் ஸ்டோரி
பூஜா ஹெக்டே

முகமூடியில் ஜீவாவுடன் அறிமுகமான பூஜா ஹெக்டேவுக்கு, நெல்சன் இயக்கும் விஜய் திரைப்படத்தில் ஹீரோயினாகும் ஜாக்பாட் அடித்திருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

முகமூடியில் ஜீவாவுடன் அறிமுகமான பூஜா ஹெக்டேவுக்கு, நெல்சன் இயக்கும் விஜய் திரைப்படத்தில் ஹீரோயினாகும் ஜாக்பாட் அடித்திருக்கிறது.

Published:Updated:
பூஜா ஹெக்டே
பிரீமியம் ஸ்டோரி
பூஜா ஹெக்டே

கார்த்தி, விஜய் சேதுபதி, விஷால் எனத் தமிழில் முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துவரும் ராசி கன்னா, அடுத்து பாலிவுட் போகிறார். அதுவும் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக! முதன்முறையாக ‘ருத்ரா’ என்கிற வெப் சீரீஸில் நுழையும் அஜய் தேவ்கனுக்கு ராசி கன்னாதான் ஜோடி. அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கவிருப்பதால், அம்மணியைக் கையில் பிடிக்க முடியவில்லை. ராசி கன்னாவுக்கு ராசி வொர்க்அவுட்டாகிடுச்சு!

‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரீஸுக்கு எதிராகக் கடுமையாகக் கொந்தளிக்கும் இயக்குநர் அமீர், ‘‘சமந்தாவுக்கு இனி தமிழில் நடிக்க வாய்ப்பு வழங்கக் கூடாது’’ என்று கோரிக்கைவைத்தார். அதுவரைக்கும் சரி. ‘‘திருமணத்துக்குப் பிறகும் கவர்ச்சியாக நடிக்கும் சமந்தாவுக்குத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் எப்படிப் புரியும்?’’ எனவும் அமீர் கேள்வி எழுப்ப, சமந்தாவுக்கு செம கோபமாம். அமீருக்கு எதிராக பிரஸ் மீட் வைக்கிற அளவுக்கு சமந்தா தயாராக, கணவர் நாக சைதன்யாதான் சமாதானப்படுத்தினாராம். என்றாலும், அமீருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பும் முடிவில் இருக்கிறாராம் சமந்தா.

தெலுங்கில் நானி நடித்த ‘கேங்க் லீடர்’ படத்தின் மூலமாக பரபரப்பானவர் பிரியங்கா அருள் மோகன். சிவகார்த்திகேயனுக்கு ‘டாக்டர்’ படத்தில் ஜோடியானவர், அடுத்தபடியாக ‘டான்’ படத்திலும் சிவாவுடன் கெட்டியாக ஒட்டிக்கொண்டார். இரு படங்களும் ரிலீஸாவதற்கு முன்னரே சூர்யாவுடனும் பிரியங்கா அருள் மோகன் ஜோடி போட, ‘அடேங்கப்பா’ என ஆச்சர்யப்படுகிறது கோடம்பாக்கம். தெலுங்கிலும் இதேபோல் பிஸியாக வேண்டும் என்பதுதான் அம்மணியின் கனவாம்.

மிஸ்டர் மியாவ்

முகமூடியில் ஜீவாவுடன் அறிமுகமான பூஜா ஹெக்டேவுக்கு, நெல்சன் இயக்கும் விஜய் திரைப்படத்தில் ஹீரோயினாகும் ஜாக்பாட் அடித்திருக்கிறது. தெலுங்கில் மூன்று, இந்தியில் மூன்று எனக் கைவசம் படங்களை வைத்திருந்தாலும், “தளபதி படம் எனக்கு ஸ்பெஷல்!” என்கிறார். அதேசமயம் ‘அல வைகுந்தபுரம்லு’ கொடுத்த ஹைப்பில், தெலுங்கிலும் ரசிகர்கள் மனதில் பூஜா கொடிகட்டிப் பறக்கிறார்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்கான ‘நாராப்பா’ படத்தில், மஞ்சு வாரியர் பாத்திரத்தில் நடிக்கிறார் பிரியாமணி. குடும்பப் பாங்கான படங்களில் நடித்தது போதும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம். வில்லி பாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை, வித்தியாசமான பாத்திரமாக இருக்க வேண்டும் எனக் கறாராகச் சொல்கிறாராம். வெப் சீரீஸ் கதைகளுக்கும் இதே டிமாண்ட்தானாம். ‘சினிமா உலகம் எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு. ஏண்பா இன்னும் அரைச்ச மாவையே அரைக்கிறீங்க’ எனச் சமீபத்தில் கதை சொன்ன ஒரு புதுமுக இயக்குநரிடம் வெளிப்படையாகவே வேதனைப்பட்டாராம் பிரியாமணி.

உஷ்…

அரசியல் மற்றும் சினிமா வாரிசுப் புள்ளியின் மனைவியான இயக்குநர், சில மாதங்களுக்கு முன்னரே தங்களின் சொந்த கம்பெனியில் படம் இயக்கத் தயாரானாராம். ‘தேர்தல் முடியட்டும்’ என்றார்களாம் குடும்பத் தரப்பில். தேர்தல் முடிவுகள் சாதகமான பின்னரும் படத்தைத் தயாரிக் காமல் இழுத்தடித்ததால், வேறு நிறுவனத்தைப் பிடித்து அறிவிப்பை வெளியிட்டுவிட்டார் அம்மணி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism