அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

ஊரடங்கு முடிந்ததும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

* ஊரடங்கு முடிந்ததும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். `ஷூட்டிங் தொடங்க எப்படியும் அக்டோபர், நவம்பர் மாதமாகிவிடும்’ என்கிறார்கள். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார்.

* ‘தலைவன் இருக்கின்றான்’ படத்துக்கு அடுத்து ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் என படங்கள் தயாரிப்பதில் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பயங்கர பிஸி. ‘நஷ்டத்தைச் சந்தித்துக்கொண்டிருந்த ராஜ்கமல் ஃபிலிம்ஸ், எப்படி பெரும் பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கிறது?’ என்ற கேள்விக்கு, ‘ஒரு பிசினஸ் டீம், ராஜ்கமல் நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்திருக்கிறது’ என்கிறார்கள். படம் வெற்றிபெற்றால், பணம் போட்டவர்களுக்கு 75 சதவிகிதம், கமலுக்கு 25 சதவிகிதம் லாபத்தில் பங்கு என்பதும், படம் ஒருவேளை நஷ்டத்தைச் சந்தித்தால், கமலுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்பதும்தான் ஒப்பந்தமாம்.

* ‘தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்து, பின்னர் சிம்புவுடன் காதல், மோதல் என ஆகி, மீண்டும் மும்பையிலேயே செட்டில் ஆனவருக்குக் கல்யாணம்’ என யாரோ கொளுத்திப்போட, கடுப்பாகியிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. ‘‘எனக்குத் திருமணம் எப்போது என நான்தான் முடிவு செய்ய வேண்டும். நான் தொடர்ந்து படங்கள், வெப்சீரிஸ் என நடிப்பில்தான் கவனம் செலுத்துகிறேன்’’ எனச் சொல்லியிருக்கிறார் ஹன்சிகா.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

* `விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்த படம் டிராப்பாகிவிட்டது’ என்கிறார்கள். ஊரடங்கு முடிந்ததும், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தைத் தொடங்கவிருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்தப் படம் முடியவே பல மாதங்கள் ஆகும் என்பதால், சிவகார்த்திகேயனும் வேறு படங்களை கமிட் செய்துவிட்டார். `இவர்கள் இருவரும் இணையும் படத்தைத் தயாரிப்பதாக இருந்த லைகா நிறுவனமும் பின்வாங்கிவிட்டதால் கூட்டணி முறிந்தது’ என்கிறார்கள்.

ஹன்சிகா
ஹன்சிகா

* ஏற்கெனவே ‘பிசாசு’ எனும் பேய்ப் படத்தை இயக்கிய மிஷ்கின் அடுத்து ‘காவு’ எனும் பேய்ப் படத்தை இயக்குகிறார். `முதலில் பெண்ணைப் பேயாகக் காட்டி, பின்பு தேவதையாக மாற்றிய ‘பிசாசு’ ஸ்டைலில்தான் இந்தப் படமும் இருக்கும்’ என்கிறார்கள். இந்தப் படத்தில் பேய் டு தேவதை ட்ரான்ஸ்ஃபர்மேஷனில் நடிக்க விருப்பவர் ஸ்ருதி ஹாசன்.