Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

கொரோனா தொற்று கோலிவுட்டிலும் பயங்கரமாகப் பரவுகிறதாம்.

மிஸ்டர் மியாவ்

கொரோனா தொற்று கோலிவுட்டிலும் பயங்கரமாகப் பரவுகிறதாம்.

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

* `வழக்கமான ஹீரோயின் கேரக்டர்களில் இனி நடிப்பதில்லை’ என்று முடிவெடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய கதாபாத்திரம் லீட் ரோலாக இருக்க வேண்டும் அல்லது தன்னுடைய கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதனால், வழக்கமான ஹீரோயின் கதையோடு வருபவர்களையெல்லாம் கீர்த்தி வரவேற்பதில்லையாம்.

* சுஷாந்த் சிங்கின் தற்கொலை பாலிவுட்டில் காலங்காலமாக நடக்கும் ‘நெபடிச (Nepotism) அரசியலை’ (தங்கள் செல்வாக்கை வாரிசுகளுக்காகவும், உறவினர்களுக்காகவும் பயன்படுத்துவது) மீண்டும் பேசுபொருளாக்கியிருக்கிறது. `சுஷாந்த்தைப் படங்களில் நடிக்க வைக்காமல் இருக்கவே ஒரு லாபி நடந்திருக்கிறது’ என்கிறார்கள் அவரின் நண்பர்கள். சுஷாந்த்தின் மரணத்துக்குக் காரணமாக அதிகம் குற்றம்சாட்டப்படுகிறார் தயாரிப்பாளர் கரண் ஜோஹர். இவரின் தயாரிப்பில் வெளிவந்த ‘டிரைவ்’ படம்தான் சுஷாந்த்தின் கடைசிப் படம். `கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள், இரண்டு முறை ரீஷூட் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், தியேட்டர் ரிலீஸ் ஆகாமல் நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸானதில் தொடங்கி, இதில் பல பஞ்சாயத்துகள் இருக்கின்றன’ என்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* கடவுள், மதம், நாட்டுநடப்பு பற்றியெல்லாம் எதார்த்தமாகப் பேசிவருவதால், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதிக்கு தொடர்ந்து போன் செய்து தொந்தரவு தருகிறார்களாம். சோஷியல் மீடியாவில் தன்னைப் பற்றி வதந்திகளைப் பரப்புவதோடு, பர்சனலாகவும் நிறைய தொல்லைகள் தருகிறார்கள் என நண்பர்களிடம் வருத்தப்பட்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

அமலா பால்
அமலா பால்

கொரோனா தொற்று கோலிவுட்டிலும் பயங்கரமாகப் பரவுகிறதாம். முன்னணி இயக்குநர், இளம் இசையமைப்பாளர், நீண்டகாலமாக ஃபீல்டில் இருந்து, தற்போதுதான் கவனம் பெற்றுவரும் ஹீரோ எனப் பலரும் தற்போது குவாரன்டைனில் இருப்பதாகச் சொல்கிறார்கள். `ஊரடங்கு காலத்திலும், வீட்டில் நடக்கும் பார்ட்டிகளைக் குறைக்காததுதான் கொரோனா பரவலுக்குக் காரணம்’ என்கிறது கோலிவுட்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

ஊரடங்கு காலத்தில் ஆரோவில்லில் செட்டிலாகிவிட்டார் நடிகை அமலா பால். ‘‘ஒரு சின்னக் குடிசை வீட்டில் சிம்பிள் வாழ்க்கை வாழ்கிறேன். சமாதானத்துடன் வாழ்வோம்’’ என்று குட்டிக் குட்டி உடைகளில் ஹாட் ஸ்டேட்டஸ்கள் தட்டுகிறார் அமலா பால்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism