Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

வழக்கறிஞராக நடிக்கிறார் நயன்

  • தெலுங்கில் தயாராகிவரும் ‘RRR’ படத்துக்குப் பிறகு, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கவிருக்கிறார். மே மாதம் தொடங்கவிருக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

மிஸ்டர் மியாவ்
ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
  • `மூக்குத்தி அம்மன்’ ஷூட்டிங்கை முழுமையாக முடித்துவிட்டு, ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார் நயன்தாரா. இந்த ஷெட்யூலில் அவருக்கான பகுதிகள் அதிகம் இருக்கின்றனவாம். இதில் முதன்முறையாக வழக்கறிஞராக நடிக்கிறார் நயன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
  • போயப்பட்டி சீனு இயக்கத்தில் உருவாகும் தெலுங்குப் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போது அஞ்சலி, ‘பிங்க்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுடன் நடித்துவருகிறார்.

அஞ்சலி
அஞ்சலி
  • சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கும் ‘அரண்மனை 3’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, குஜராத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. விவேக், யோகிபாபு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • சமந்தா நடிப்பதாக இருந்த ‘மஹாசமுத்திரம்’ எனும் தெலுங்குப் படத்தில், அவருக்கு பதில் அதிதி ராவ் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்றும், சமந்தாவின் முந்தைய படங்கள் சரியாகப் போகவில்லை என்பதால்தான் இந்த முடிவை தயாரிப்புத் தரப்பு எடுத்திருக்கிறது என்றும் தகவல் வெளியானது. அதற்கு ட்விட்டரில் பதிலளித்த அதிதி, ‘வெற்றி, தோல்வி எப்போதும் ஒரு நடிகர் நடிகையின் நம்பகத்தன்மையைப் பறிக்க முடியாது. தயாரிப்புத் தரப்பிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

அதிதி ராவ்
அதிதி ராவ்
பூர்ணா
பூர்ணா
  • ஜெயலலிதாவின் பயோபிக்கான ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி கேரக்டரில் நடிக்க மதுபாலா ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘ரோஜா’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் அரவிந்த் சுவாமியும் மதுபாலாவும் ஜோடியாக நடிக்கின்றனர். சசிகலா கேரக்டரில் நடிப்பதாக இருந்த பிரியாமணி கால்ஷீட் பிரச்னை காரணமாக விலக, இப்போது அந்த கேரக்டரில் பூர்ணா நடிக்கவிருக்கிறார்.

ம்யூட்

  • க்யூட் நடிகைக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. நடிப்பைக் கைவிடாமல் தொடரும் நடிகைக்கு, தற்போது கணவர் குடும்பத்தில் எதிர்ப்புகள் வலுக்கின்றனவாம். `சீக்கிரம் சமத்தான பேரக்குழந்தையைப் பார்க்கணும்’ என்கிறார்களாம். அதோடு வெளியூர் படப்பிடிப்புகளின்போது உதவி எனும் பேரில் கண்காணிப்புக்கு ஆட்களையும் அனுப்புகிறார்களாம்.