Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ப்ரியா ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
ப்ரியா ஆனந்த்

நடிகை ப்ரியா ஆனந்துக்கு கோலிவுட்டில்தான் பெரிதாக வாய்ப்புகள் இல்லையே தவிர, கன்னட சினிமாவில் அவர் பிஸியாகத்தான் இருக்கிறார்

மிஸ்டர் மியாவ்

நடிகை ப்ரியா ஆனந்துக்கு கோலிவுட்டில்தான் பெரிதாக வாய்ப்புகள் இல்லையே தவிர, கன்னட சினிமாவில் அவர் பிஸியாகத்தான் இருக்கிறார்

Published:Updated:
ப்ரியா ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
ப்ரியா ஆனந்த்

‘ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை எடுக்கப்போகிறேன்’ என முதன்முதலில் அறிவித்தவர், மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்த பிரியதர்ஷினிதான். ‘தி அயர்ன் லேடி’ என டைட்டில் வைக்கப்பட்டு, ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியானது. இதுவரை ஷூட்டிங் செல்லாத நிலையில், தற்போது சசிகலாவை நேரில் சந்தித்துவிட்டுத் திரும்பிய இயக்குநர், படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம் என்று அறிவித்திருக்கிறார். கெளதம் மேனன் - பிரசாத் முருகேசன் இயக்கத்தில் ‘குயின்’, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ ஆகியவை உருவானதைத் தொடர்ந்து, இந்தப் படம் சசிகலாவின் பார்வையிலிருந்து எடுக்கப்படவிருக்கிறது என்கிறார்கள்.

வரலட்சுமி சரத்குமாருக்கு ஹீரோயின் வாய்ப்புகளைவிட குணச்சித்திரக் கதாபாத்திரங்கள்தான் அதிகம் வருகின்றனவாம். குறிப்பாக, நெகட்டிவ் ஷேட் கேரக்டர்கள். தெலுங்கில் ரவிதேஜா நடித்த ‘க்ராக்’ படத்தில் வில்லியாக நடித்ததைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறதாம்.

நடிகை ப்ரியா ஆனந்துக்கு கோலிவுட்டில்தான் பெரிதாக வாய்ப்புகள் இல்லையே தவிர, கன்னட சினிமாவில் அவர் பிஸியாகத்தான் இருக்கிறார். புனீத் ராஜ்குமாருக்கு ஜோடியாக ‘ஜேம்ஸ்’, சிவராஜ்குமாருக்கு ஜோடியாக ‘RDX’ என இரண்டு படங்களில் நடித்துவருகிறார். இடையே, இந்தியில் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து முடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்தவரை தற்போது, ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்கும் ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் ப்ரியா.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தில், ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் கொரியன் நடிகை பே சூஸி நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். ‘இந்தியன் 2’ படத்துக்காக இவரிடம் ஏற்கெனவே பேசியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

உஷ்!

அப்பாவின் அரசியல் அட்ராசிட்டிகளுக்குப் பிறகும் அமைதியாகவே இருக்கும் நடிகர், இந்தத் தேர்தல் களத்தை ரொம்பவே உற்றுநோக்கி வருகிறார். சீட் பங்கீடுகள், கூட்டணி மூவ், அரசியல் தலைவர்களின் பேச்சுகள், தேர்தல் வாக்குறுதிகள், கருத்துக் கணிப்புகள், மாலை நேரத் தொலைக்காட்சி விவாதங்கள் என அனைத்தையும் அப்டேட் செய்துகொள்ள தனது ரசிகர் மன்ற அலுவலகத்தில் மாலையில் சிப்ஸ், வாட்டர் பாட்டில் சகிதம் உட்கார்ந்துவிடுகிறார். அடுத்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ஒரு பயிற்சியாகவே இதைச் செய்துவருகிறாராம்!