Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ரெஜினா கஸான்ட்ரா
பிரீமியம் ஸ்டோரி
ரெஜினா கஸான்ட்ரா

ரெஜினா கஸான்ட்ரா, மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

மிஸ்டர் மியாவ்

ரெஜினா கஸான்ட்ரா, மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

Published:Updated:
ரெஜினா கஸான்ட்ரா
பிரீமியம் ஸ்டோரி
ரெஜினா கஸான்ட்ரா
  • தமிழில் அதிக பட வாய்ப்புகள் அமையாத நிலையில் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த நிவேதா பெத்துராஜ், அந்தப் படத்தை பெரிதும் நம்பியிருந்தார். மார்ச் மாதம் படம் வெளிவர இருந்த நிலையில், அதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போயிருக்கிறது. `இதனால், வாய்ப்புகளும் தள்ளிப்போகின்றன’ எனப் புலம்புகிறாராம் நிவேதா.

நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ்
  • உடல் எடை குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார் விஜய் சேதுபதி. ஆனால், இப்போது கடுமையான டயட்டில் இருக்கிறாராம். அமீர் கானுடன் ‘லால் சிங் சத்தா’ படத்தில் நடிப்பதற்காகத்தான் இந்த டயட் மாற்றம் என்கிறார்கள். கிட்டத்தட்ட 25 கிலோ எடையைக் குறைக்க திட்டமாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘தடம்’, நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. தற்போது, இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகவிருக்கிறது. ஹீரோவாக சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார்.

  • தெலுங்கு பக்கம் ஒதுங்கி இருந்த ரெஜினா கஸான்ட்ரா, மீண்டும் தமிழுக்கு வருகிறார். கார்த்திக் ராஜு இயக்கத்தில் ‘சூர்ப்பனகை’ படத்தில் நடித்திருக்கும் ரெஜினா, இரட்டை வேடங்களில் கலக்கியிருக்கிறாராம். அடுத்து அருண் விஜய்யுடன் த்ரில்லர் படத்தில் நடிக்கிறாராம்.

ரெஜினா கஸான்ட்ரா
ரெஜினா கஸான்ட்ரா
  • ‘துப்பறிவாளன்-2’ மிஸ்ஸானதில் மிஷ்கினுக்கு வருத்தம்தான். ஆனாலும், அடுத்தடுத்த கதைகளில் பிஸியாகிவிட்டார். ‘சித்திரம் பேசுதடி’ போன்று சிம்புவுக்கு ஒரு காதல் கதை சொல்லியிருக்கிறார் மிஷ்கின். ‘மாநாடு’ முடிந்ததும் சிம்பு - மிஷ்கின் படம் தொடங்கலாம் என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ம்யூட்

  • இளம் இயக்குநரின் படத்தை முடித்துவிட்ட லேட்டஸ்ட் ‘வாத்தியார்’ ஹீரோ, அடுத்து பல இயக்குநர்களிடம் கதை கேட்டுவிட்டார். கிராமத்துக் கதைக்கு நடிகர் ‘ஓகே’ சொல்ல... தயாரிப்புத் தரப்பு வேண்டாம் என மறுத்துவிட்டதாம். அடுத்து, பெண் இயக்குநரின் படத்துக்கு ‘ஓகே’ சொன்னார். ஆனால், படப்பிடிப்பு தொடங்கவே சில மாதங்களாகும் என்கிறாராம். அதுவரை எப்படி சும்மா இருப்பது என தீவிர யோசனையில் இருக்கிறாராம் நடிகர்.

  • தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ‘வளர்ந்த’ நடிகை, தேசிய விருது பெற்றிருக்கும் பிரகாசமான இயக்குநரை தற்போது காதலிப்பதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்து செய்திகள் வந்தும் நடிகை மறுப்பு தெரிவிக்காமல் இருக்கிறாராம். விரைவில் சுபமாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism