Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

அப்பாவுக்கு ஜோடி சிம்ரன், மகனுக்கு ஜோடி வாணி போஜன் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ்டர் மியாவ்

அப்பாவுக்கு ஜோடி சிம்ரன், மகனுக்கு ஜோடி வாணி போஜன் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

கிட்டத்தட்ட 10 வருடங்களாகத் தமிழ்த் திரையில் நடித்துவந்தாலும், தன் பெயர் சொல்லும் படமாக ஒரு படமாவது அமைய வேண்டும் என்பது காயத்ரியின் எதிர்பார்ப்பு. `சூப்பர் டீலக்ஸ்’ கொஞ்சம் அதை நெருங்கியது. மகிழ்ச்சியான செய்தியாக, இப்போது மலையாளத்தில் அறிமுகமாகவிருக்கிறார் காயத்ரி. நாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கும் அந்தப் படத்தை, ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தை இயக்கிய இயக்குநர் ரதீஷ் இயக்குகிறார்.

மல்லுவுட்டின் பார்வதிக்கு இந்தியா முழுவதுமே ரசிகர்கள் உண்டு. செலக்டிவான கதைகள், யதார்த்த நடிப்பு என்று மொழி தாண்டிப் பிரபலமாகியிருக்கும் இவர், தற்போது மம்மூட்டியுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்தை அறிமுக இயக்குநர் ரதீனா இயக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். மம்மூட்டியும் பார்வதியும் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை.

மிஸ்டர் மியாவ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் இணைந்து நடிக்கும் படத்தில், சிம்ரன் ஒப்பந்தமாகியிருக் கிறார். ஏற்கெனவே, வாணி போஜன் கமிட்டாகியிருக்க, அப்பாவுக்கு ஜோடி சிம்ரன், மகனுக்கு ஜோடி வாணி போஜன் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்று அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் படத்தில் இணைந்திருக்கிறார்.

‘தாராள பிரபு’வில் கவனம் ஈர்த்த தன்யா ஹோப், அந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் ஒரு ரவுண்ட் வரலாம் என்று எதிர்பார்த்திருந்தார். சரியாகப் பட ரிலீஸின்போது கொரோனாவும் இந்தியாவுக்குள் ஹாய் சொல்ல, படம் பிக்கப் ஆகும் நேரத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன. இது அவர் கனவில் லேசான பின்னடைவைக் கொடுத்தது என்றாலும், இந்த வருடம் கன்னடத்தில் ‘பெல்லி பாட்டம்’, தமிழில் ‘குலசாமி’ என்று ஓரிரு படங்கள் மீண்டும் கைக்கு வந்ததில் தன்யா ஹோப்பாக இருக்கிறார்!

மிஸ்டர் மியாவ்

உஷ்...

பிரபல ஓடிடி நிறுவனத்துக்கு, பெரிய இயக்குநர் தயாரிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் ஒன்பது இயக்குநர்கள் இயக்கும் ஒன்பது எபிசோட் கொண்ட வெப்சீரீஸில் இயக்குநர்கள் மாற்றம், பல்லாங்குழி ஆட்டமாக மாறிக்கொண்டே இருக்கிறதாம். குறைவாகப் பேசும் அந்த இயக்குநர் சொல்லும் நிறைய கரெக்‌ஷன் கண்டிஷன்கள்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism