Published:Updated:

மிஸ்டர் மியாவ்

சாய் பல்லவி
பிரீமியம் ஸ்டோரி
சாய் பல்லவி

சாய் பல்லவியின் தங்கை பூஜாவும் சினிமாவில் அறிமுகமாகிறார்.

மிஸ்டர் மியாவ்

சாய் பல்லவியின் தங்கை பூஜாவும் சினிமாவில் அறிமுகமாகிறார்.

Published:Updated:
சாய் பல்லவி
பிரீமியம் ஸ்டோரி
சாய் பல்லவி

* டான்ஸராக நமக்குத் தெரிந்த சாய் பல்லவி, அடிப்படையில் ஒரு மருத்துவர். ஆனால், பிரபலமானது என்னவோ மலர் டீச்சராக. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அவர் பிஸியாக இருக்கும் நிலையில், அவரின் தங்கை பூஜாவும் சினிமாவில் அறிமுகமாகிறார். சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டன்ட் சில்வா இயக்கவிருக்கும் படத்தில் பூஜாதான் நாயகி!

* அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து, மல்லு மக்களை ‘அடிபொளி’ அள்ளவைக்கும் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர், ‘அசுரன்’ மூலமாகத் தமிழுக்கு அறிமுகமானார். இப்போது ‘அமெரிக்கி பண்டிட்’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். அறிமுக இயக்குநர் கல்பேஷ் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் மாதவன் நாயகனாக நடிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

* ‘ஹீரோயினாகத்தான் நடிப்பேன்’ என்ற கண்டிஷனெல்லாம் இல்லாமல், பர்ஃபாமென்ஸில் கலக்குவதற்கான வாய்ப்பிருந்தால் உடனே தம்ஸ்அப் காட்டிவிடுகிறார் பூர்ணா. தமிழில் ‘தலைவி’, ‘விசித்திரன்’, டோலிவுட்டில் ‘சுந்தரி’ எனும் ஹீரோயின் சென்ட்ரிக் படம், பாலகிருஷ்ணா நடிக்கும் படம் என பலமான லைன் அப் வைத்திருக்கிறார் பூர்ணா. தற்போது தெலுங்கு ‘த்ரிஷ்யம் 2’ படத்திலும் வழக்கறிஞர் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

* கமல் நடித்த ‘மன்மத லீலை’ படம் தங்களிடம் அனுமதி பெறாமல், மறுபடியும் எடுக்கப்படுவதாகக் குமுறுகிறது ‘மன்மத லீலை’ தயாரிப்பாளர் தரப்பு. ஆனால், அசோக் செல்வன் நடிக்க, வெங்கட் பிரபு இயக்கிவரும் படக்குழுவோ, ‘நாங்கள் எடுப்பது வேறு கதை; ஆனால், அந்த டைட்டிலைத்தான் கேட்கலாமென இருக்கிறோம்’ என்கிறது.

உஷ்..!

* வருத்தப்படாதவரின் மருத்துவப் படம் தள்ளிப்போனதற்குத் தேர்தல் மட்டும் காரணமில்லையாம். தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையை வியாபாரம் செய்வதில் படக்குழுவுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். படக்குழு சொன்ன தொகை விநியோகஸ்தர்கள் பார்வையில் அதிகமாக இருப்பதால் கொஞ்சம் இழுபறி நிலவ... ‘சரி, தேர்தல் முடியட்டும், பார்த்துக்கொள்வோம்’ என கேப் விட்டிருக்கிறது படக்குழு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism