Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

கே.ஜி.எஃப்’ படத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார்.

*லாக் டெளனில் திருமணம், ஹனிமூன் ட்ரிப் என பர்சனல் கமிட்மென்ட்களை முடித்துக்கொண்டு, இப்போது சினிமா பக்கம் சுற்றிச் சுழல ஆரம்பித்துவிட்டார் காஜல் அகர்வால். சிரஞ்சீவியுடன் ‘ஆச்சார்யா’, துல்கர் சல்மானுடன் ‘ஹே சினாமிகா’ ஆகிய படங்கள் கைவசம் இருந்த நிலையில், தற்போது நாகர்ஜுனாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

*‘கே.ஜி.எஃப்’ படத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். பிரபாஸை வைத்து ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடவிருக்கிறார் ஸ்ரீநிதி. ‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டர் மியாவ்
படம்: தீரன்

* எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ‘நெஞ்சம் மறப்பதில்லை’யில் தன் நடிப்பு பேசப்பட்டதில் நந்திதா ஹேப்பி அண்ணாச்சி. இப்போது படப்பிடிப்பு முடிந்து வெளியாகத் தயாராகிக்கொண்டிருக்கும் `IPC 376’ படமும் தனக்குப் பெரிய பெயர் வாங்கித்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். கறாரான காக்கியாக அவர் நடிக்கும் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகளில் கெத்துகாட்டியிருக்கிறாராம் நந்திதா!

* ஹரி இயக்கத்தில் அருண் விஜய் முதன்முறையாக நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பழநியில் தொடங்கியிருக்கிறது. பிரியா பவானி சங்கர்தான் ஹீரோயின். வழக்கம்போல ஹரிக்கே உரிய விறுவிறு பாணியில் படத்தை முடித்து விரைவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். அருண் விஜய்க்கு வில்லனாக பிரகாஷ் ராஜ் நடிப்பதுடன், ‘கே.ஜி.எஃப்’ படத்தில் வில்லனாக நடித்த ராமசந்திர ராஜுவும் நடிப்பது படத்துக்கு ஒன்றரை டன் வெயிட்டேஜைக் கூட்டியிருக்கிறது.

உஷ்!

* தமிழ்நாட்டில் விளம்பரம் மூலம் பாப்புலரான ஓனர் நாயகன் நடிக்கும் திரைப்படத்தில் நடிகர்கள், டெக்னீஷியன்கள் என எல்லோருமே லெஜண்ட்ஸ். ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட ஏற்கெனவே அவருடன் விளம்பரங்களில் தோன்றிய மில்கி பியூட்டி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால், அவர் என்ன சொன்னாரென்று தெரியவில்லை... ‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை’ என திடீரென்று பாலிவுட் பக்கம் போய் தேவலோக அழகிப் பெயர் கொண்ட நடிகையை கமிட் செய்திருக்கிறார்கள்.