சந்தானத்தை வைத்து ‘ஏ1’ படத்தை இயக்கிய ஜான்சன், மீண்டும் அவரை இயக்கவிருக்கிறார். இந்த முறை ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. வடசென்னை கேங்ஸ்டராக வரும் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்க அனைகா சோட்டி ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘ஏ1’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் சந்தோஷ் நாராயணன்தான் இசையமைக்கிறார்.

சிரஞ்சீவி நடிக்கும் தெலுங்குப் படமான ‘ஆச்சார்யா’வில் நடிப்பதாக இருந்த த்ரிஷா, கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்திலிருந்து விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தனது கதாபாத்திரத்தில் திருப்தி இல்லாத காரணத்தால் த்ரிஷா விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை அணுகியுள்ளது படக்குழு. கொரோனா காரணமாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருப்பதால், மீண்டும் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்குள் படத்தின் கதாநாயகியை முடிவு செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றனர் படக்குழுவினர்.

உலகமே கொரோனா வைரஸுக்கு அஞ்சி இருக்கும் நிலையில், மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் ஹன்சிகா மோத்வானி, அங்கிருந்து விதவிதமான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். ஹன்சிகாவின் 50-வது படமான ‘மஹா’வில் அவருக்கான போர்ஷன் இன்னும் மீதம் இருக்கிறதாம்.

விஜய் தேவரகொண்டா, ரீது வர்மா நடிப்பில் வெளியான ‘பெல்லி சூப்புலு’ தெலுங்குப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாணும் பிரியா பவானி சங்கரும் நடித்து முடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ‘ஓ மணப்பெண்ணே!’ எனப் பெயரிட்டுள்ளனர்.

மலையாளத்தில் பெரும்பாலான கதாநாயகிகள் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்துவரும் நிலையில், தற்போது அனுபமா பரமேஸ்வரனும் அப்படியொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இயக்குநர் யார் என்பது விரைவில் தெரியவரும் என்கிறார்கள். தவிர, தமிழில் அதர்வாவுடன் ‘தள்ளிப்போகாதே’, தெலுங்கில் ஒரு படம் என மற்ற மொழிகளிலும் அனுபமா பிஸி!

கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான உடற்பயிற்சி மையங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் வீட்டிலேயே இருப்பதை வைத்துத் தாங்கள் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், காஜல் அகர்வால் உள்ளிட்ட ஹீரோயின்கள் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

சாதிப் பட இயக்குநர் என்ற பெயர் இருந்தாலும், அந்த இயக்குநரின் படங்கள் பி, சி சென்டர்களில் ஹிட்டாகின்றன. அதனால், அவரின் இயக்கத்தில் நடிக்க இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அவரின் சாதிப் பெயர் கொண்ட படத்தில் ஏற்கெனவே நடித்த வாரிசு நடிகரே, அடுத்த படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறாராம்.