Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஐஸ்வர்யா ராஜேஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குநர் ஷங்கர் ராம் சரணை வைத்து மாஸான ஆக்‌ஷன் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

இயக்குநர் ஷங்கர் ராம் சரணை வைத்து மாஸான ஆக்‌ஷன் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

Published:Updated:
ஐஸ்வர்யா ராஜேஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா ராஜேஷ்

‘சூரரைப் போற்று’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்த அபர்ணா பாலமுரளிக்கு, தற்போது புதிதாக ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அவர் தமிழில் அறிமுகமான ‘எட்டு தோட்டாக்கள்’ படத்துக்கு முன்பாகவே, அதாவது ஐந்து வருடங்களுக்கு முன்பாக அவர் நடித்திருந்த ‘தீதும் நன்றும்’ என்கிற படத்தைத் தற்போது ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறதாம். ‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு தமிழில் பெரிய பட வாய்ப்புகள் வரும் வேளையில், தனது கரியரின் ஆரம்பத்தில் நடித்த படம் வெளியாவதால் புதிய வாய்ப்புகளுக்குப் பிரச்னை வந்துவிடுமோ எனக் குழப்பத்தில் இருக்கிறார் அபர்ணா.

அபர்ணா
அபர்ணா

‘இந்தியன் - 2’ படத்தை முடித்துவிட்டு தெலுங்கு சினிமாவுக்குச் செல்லும் இயக்குநர் ஷங்கர், அங்கு ராம் சரணை வைத்து மாஸான ஆக்‌ஷன் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் இசையமைப் பாளாருக்காக ஏ.ஆர்.ரஹ்மானிடமும் அனிருத்திடமும் பேசிவரும் ஷங்கர், படத்தின் ஹீரோயின் ரோலுக்காக ராஷ்மிகா மந்தனாவை கமிட் செய்திருக்கிறாராம். இதுதான் ராம் சரணும் ராஷ்மிகாவும் இணைந்து நடிக்கும் முதல் படம்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துவருகிறார் ஐஸ்வர்யா ராய். நடுத்தர வயதுடைய கேரக்டர்; மாயாஜாலம் கற்ற பேச்சுத்திறனற்ற வயதான கேரக்டர் எனச் சவாலான ரோல்களில் நடிக்கிறார். வயதான தோற்றத்தில் நடித்த சில காட்சிகளைப் படமாக்கும்போது, படக்குழுவையே ஆச்சர்யப்படவைத்தாராம் ஐஸ்வர்யா ராய். கடந்த பத்து வருடங்களாகத் தொடர்ச்சியாக நடிக்காமல் இருந்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் ஐஸ் நடிக்கும்விதத்தைப் பார்த்து செட்டே மிரண்டுபோனதாம்!

ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்

‘ஓடிடி-யில் வெளியான ‘க/பெ. ரணசிங்கம்’ தியேட்டரில் வெளியாகியிருந்தால், தன் நடிப்புக்குப் பல விருதுகள் கிடைத்திருக்கும்’ என்பது ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபமாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் மனக்குறை. நானியுடன் நடிக்கும் ‘டக் ஜெகதீஷ்’ படத்தைப் பெரிதும் நம்பியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தெலுங்கில் பெரிய ஹீரோவான நானியுடன் நடித்த அந்தப் படத்தின் டீசர் வெளியான அன்றே 4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ஹிட்டடித்ததில் ஐஸ்வர்யா ராஜேஷ் செம ஹேப்பி. இதற்கிடையில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கிலும் கமிட்டானதில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம்!

உஷ்!

யூடியூப்பில் ‘கொடைவள்ளல் பாடல்’ பெரிய ஹிட்டாகி டிரெண்டானதைக் கண்ட இன்னொரு இசையமைப்பாளர் கொலைவெறியாகிவிட்டாராம். உடனே தனது ‘லவ்வர்ஸ் டே’ பாடலை ஏகத்துக்கும் புரொமோட் செய்தும் பலனில்லாமல் போகவேதான், “நண்பாஸ் எதும் பண்ணணும்ப்பா” என்று உடனடியாக அழைத்து, அவசரமாக ஷூட்டிங் நடத்தி, அந்த ட்ரையோ புரொமோவை விடச் செய்தாராம்!