Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

ஓ.டி.டி தளங்கள் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்கும் மோசடி கும்பல்

மிஸ்டர் மியாவ்

ஓ.டி.டி தளங்கள் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்கும் மோசடி கும்பல்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

*கொரோனா சூழலால் தமிழ் திரையுலகம் முடங்கிக்கிடக்கும் நிலையில் ஓ.டி.டி தளங்கள் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்கும் மோசடி கும்பல் உருவாகியிருப்பதாகப் புலம்புகிறது கோலிவுட். “பல மாதங்களாக படம் ரிலீஸாகாமல் இருக்கும் தயாரிப்பாளர்களை அணுகி ‘நாங்கள் உங்கள் படத்தை அமேசான், நெட்ஃபிளிக்ஸ், ஹாட் ஸ்டாரில் விற்றுத்தருகிறோம். எங்களுக்கு கமிஷன் வேண்டும்’ என்று சொல்லிப் பணத்தைக் கறந்துவிடுகிறார்களாம். சில வாரங்கள் கழித்து, ‘அந்த நிறுவனங்கள் படம் நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டன. நீங்கள் கொடுத்த பணம் புராசஸிங் ஃபீஸுக்கு சரியாகிவிட்டது’ என கம்பிநீட்டிவிடுகிறதாம் அந்தக் கும்பல்.

* கடந்த சில மாதங்களுக்கு முன் மனைவி ஷாலினியின் 40-வது பிறந்த நாளை லீலா பேலஸ் ஹோட்டலில் கொண்டாடினார் அஜித். ஷாலினிக்கே தெரியாமல் அவரின் பள்ளி காலத் தோழிகள் எல்லோரையும் வரவழைத்து செம சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். ஏப்ரல் 24 இவர்களின் 20-வது திருமண ஆண்டு. திருமண நாளை எப்போதும் தன் பிறந்த நாளோடு சேர்த்து மே 1 அன்று அஜித் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து பல ஏற்பாடுகள் செய்திருந்தார். ஆனால், லாக் டெளன் காரணமாக ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. ஹவுஸ் பார்ட்டிதானாம். இதனால் ‘தல பிரியாணி மிஸ்ஸாகிடுச்சே!’ என வருத்தப்படுகிறார்கள் அஜித்தின் நெருங்கிய நண்பர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* நடிகர்கள் எல்லோரும் ரியல்மேன் சேலஞ்ச் என வீட்டில் செய்யும் கூட்டல், கழித்தல், பெருக்கல், சமையல் வேலைகளை வீடியோவாக சோஷியல் மீடியாக்களில் பதிவேற்ற, நடிகைகள் எல்லோரும் நாஸ்டால்ஜியாவில் மூழ்கியிருக்கிறார்கள். மலையாள நடிகை பார்வதி தன் சிறு வயது புகைப்படத்தைப் பகிர, அந்த ட்ரெண்ட் இப்போது குஷ்பு, சாய்பல்லவி மூலம் கோலிவுட்டிலும் பரவ ஆரம்பித்திருக்கிறது.

பார்வதி - சாய்பல்லவி
பார்வதி - சாய்பல்லவி

* கொரோனா எப்போது முடியும், நிலைமை எப்போது சீராகி தியேட்டர்கள் திறக்கும் எனத் தெரியவில்லை. இதனால், முதல்முறையாக பெரிய படம் ஒன்று, தியேட்டரில் ரிலீஸாகாமல் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. ஆம், ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தால்’ திரைப்படம் மே மாதம் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை ஒன்பது கோடி ரூபாய்க்கு அமேசானுக்கு விற்பனை செய்திருக்கிறது சூர்யாவின் 2டி நிறுவனம். அமேசானில் ரிலீஸானாலும், நிலைமை சீரானதும் தமிழகத்தில் சில தியேட்டர்களில் மட்டும் படத்தை ரிலீஸ் செய்யும் திட்டமும் இருக்கிறதாம்.

ஜோதிகா
ஜோதிகா

*ஜோதிகாவின் தஞ்சாவூர் கோயில் பேச்சு விவகாரத்தை முன்வைத்து, “ஜோதிகா, சர்ச்சைக்குரிய வகையில் எதுவும் பேசவில்லை. ஆனால் வேறு ஏதோ ஒரு விஷயத்தை திசைத்திருப்ப, ஒரு மாதத்துக்கு முந்தைய பேச்சை இப்போது கிளறியிருக்கிறார்கள். முதலில் சூர்யா, இப்போது ஜோதிகா என வேண்டுமென்றே எங்கள் வீட்டை டார்கெட் செய்கிறார்கள்’’ என வருத்தத்தில் இருக்கிறதாம் சிவகுமார் குடும்பம்.