Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிருணாளினி ரவி
பிரீமியம் ஸ்டோரி
மிருணாளினி ரவி

இயக்குநர் பாலா படத்தில் தீவிரமாக இருக்கும் சூர்யா, அடுத்து யார் படத்தில் நடிக்கப்போகிறார் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது

மிஸ்டர் மியாவ்

இயக்குநர் பாலா படத்தில் தீவிரமாக இருக்கும் சூர்யா, அடுத்து யார் படத்தில் நடிக்கப்போகிறார் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது

Published:Updated:
மிருணாளினி ரவி
பிரீமியம் ஸ்டோரி
மிருணாளினி ரவி

தமிழகத்தைவிட ஹைதராபாத்தில் வெயில் பட்டையைக் கிளப்புகிறது. ஆனாலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் சின்சியராக நடித்துவருகிறார் அஜித். பத்து நாள்களுக்குள் படத்தின் 20 சதவிகிதக் காட்சிகளை ஷூட் செய்திருக்கிறார்களாம். பேங்க் செட் போடப்பட்டிருக்கும் இடத்துக்கான வாடகை எகிறிக்கொண்டேயிருக்க, அதை இந்த ஷெட்யூலிலேயே முடித்துக் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறாராம் வினோத். செட் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டு, சின்ன பிரேக்விடத் திட்டமாம்.

மிருணாளினி ரவி
மிருணாளினி ரவி

இயக்குநர் பாலா படத்தில் தீவிரமாக இருக்கும் சூர்யா, அடுத்து யார் படத்தில் நடிக்கப்போகிறார் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. தற்போது சூரியை வைத்து ‘விடுதலை’ படத்தை இயக்கும் வெற்றி மாறன் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவைக் களமிறக்க டெஸ்ட் ஷூட் வரை முடித்துவிட்டார். இன்னொரு பக்கம் ‘சிறுத்தை’ சிவாவும் சூர்யா தேதிக்காகக் காத்திருக்கிறார். இயக்குநர் சுதா கொங்கராவும் சூர்யாவுக்காக வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறார். மூவரில் யாருக்கு சூர்யா முதலில் கால்ஷீட் கொடுக்கப்போகிறார் என கோடம்பாக்கத்தில் பட்டிமன்றமே நடக்கிறது.

சமுத்திரக்கனிக்கு ஜோடியாக தன்ஷிகா, ஆடு மேய்க்கும் பெண்ணாக நடித்த படம் ‘கிட்னா.’ மிகுந்த எதிர்பார்ப்பில் உருவான அந்தப் படம், பல காலமாகக் கிடப்பில் கிடந்தது. வித்தியாசமான கதைக் களத்துக்கு இப்போது நல்ல வரவேற்பு இருப்பதால், படத்தை மீண்டும் தொடங்கும் திட்டத்தில் இருக்கிறார் சமுத்திரக்கனி. இதில் தன்ஷிகாவுக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. ‘நல்ல கதைகள் மட்டுமே லட்சியம்’ என்கிற உறுதியோடு அடுத்தகட்ட பயணத்தைத் தீர்மானித்திருக்கும் தன்ஷிகா, சமீபத்தில் அரசியல் கதை ஒன்றைக் கேட்டு ஈர்ப்பாகியிருக்கிறார். கதை நாயகனைத் தாண்டி ஒரு கிராமத்துப் பெண்ணாக இன்றைய அரசியலைப் புட்டுப் புட்டு வைக்கிற பாத்திரமாம். ‘இந்த வருடம் நிச்சயம் எனக்கான வருடமாக இருக்கும்’ என நம்பிக்கையோடு சொல்கிறார் தன்ஷிகா.

மிருணாளினி ரவி
மிருணாளினி ரவி

எக்ஸ்க்ளூசிவ்: தனுஷ் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் எனக் கேள்விகள் கிளம்பி வருகின்றன. அவர் நடிக்கப் போகிற அடுத்த படத்தின் இயக்குநர் அவரேதான். ஆமாம், சமீபத்தில் ஒரு கதையை எழுதி முடித்திருக்கும் தனுஷ், அவரே இயக்கவும் போகிறார். ‘பவர் பாண்டி’ படத்துக்குப் பிறகு டைரக்‌ஷன் வேலையை விட்டிருந்த தனுஷ், மீண்டும் இயக்குநராகப்போகிறார். எழுத்து, இயக்கம், நடிப்பு எனத் தன்னைத் தானே தகவமைத்துக்கொள்ள இந்த முயற்சியில் இறங்குகிறாராம் தனுஷ்.

மிருணாளினி ரவி
மிருணாளினி ரவி

உஷ்...

மும்பைப் பக்கம் போன காப்பி இயக்குநரை சென்னைக்குக் கிளம்பி வரச் சொன்னாராம் மாஸ்டர் நடிகர். ‘நீதான்டா எனக்குச் சரிப்படுவ…’ எனச் சொல்லி, அடுத்த கதையைச் செய்யச் சொல்லியிருக்கிறாராம். ‘அப்படி என்னதான் வசியம்வெச்சாரோ?’ என காப்பி இயக்குநரைப் பார்த்துப் பொறாமையில் புலம்புகிறார்கள் கதை சொல்லிக் காத்திருக்கும் பிற இயக்குநர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism