நிறைய படங்கள் கையில் வைத்திருக்கும் லீடிங் லேடி லிஸ்ட்டில் நயன்தாராவோ, சமந்தாவோ இல்லை. கீர்த்தி சுரேஷ்தான் முதல் இடத்தில் இருக்கிறார்! ரஜினியுடன் ‘அண்ணாத்த’ உட்பட தமிழ், தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் தற்போது ஆறு படங்களில் நடித்து முடித்துள்ளார் கீர்த்தி. கொரோனா முடிந்ததும் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் தமிழில் இவர் நடித்திருக்கும் ‘பென்குயின்’ படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது.

கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடிக்கவிருக்கும் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. கமலுக்கு வயதாகிக்கொண்டே இருப்பதால் கிட்டத்தட்ட கமல்ஹாசன் தன்னுடைய கதாபாத்திரத்தையே விஜய் சேதுபதியிடம் கொடுத்துவிட்டார் என்கிறார்கள். அதாவது 40 வயது கமல் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என்கிறார்கள். இது கமலின் பயோபிக்காக இருக்குமாம்.

தனது சம்பளத்தைக் குறைத்து, தயாரிப்பாளர்களின் குட்புக்கில் இடம் பிடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. “கொரோனா பிரச்னையால் தயாரிப்பாளர்கள் கடும் பண நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சூழலைப் புரிந்துகொண்டுள்ளேன். அதனால் என்னுடைய அடுத்த மூன்று படங்களின் சம்பளத்தில் 25 சதவிகிதம் குறைத்துவிட்டேன். இதனால் ஒவ்வொரு படத்திலும் 1 கோடி ரூபாய் என் சம்பளம் குறையும்’’ என்று சொல்லியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

கொரோனா பிரச்னையிலும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான போட்டாபோட்டி கடுமையாக இருக்கிறது. முக்கிய தயாரிப்பாளர்கள் பலரும் மூன்று அணிகளாகப் பிரிந்து போட்டியிடுகின்றனர். இதற்கிடையே ஓ.டி.டி பிரச்னையும் வந்துவிட்டதால் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களின் காப்பான் யார் என்பதுதான் இப்போது பெரும்போட்டி!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் இந்தியில் அக்ஷய் குமார் நடித்திருக்கும் படம் ‘லக்ஷ்மி பாம்.’ லாரன்ஸ், சரத்குமார் நடித்து வெளிவந்த ‘காஞ்சனா’ தமிழ்ப் படத்தின் ரீமேக்தான் இது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும்தொகைக்கு இந்தப் படத்தின் ஓ.டி.டி உரிமையை விற்றிருக்கின்றனர்.