Published:Updated:

மிஸ்டர் மியாவ்!

தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
தமன்னா

சின்னத்திரை சீரியல்கள், யூடியூப் டெய்லி சீரிஸ் என்று டாப் கியரில் கலக்கும் ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ முதன்முறையாக ஓடிடி தளத்தில் தன் முத்திரையைப் பதிக்கவிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்!

சின்னத்திரை சீரியல்கள், யூடியூப் டெய்லி சீரிஸ் என்று டாப் கியரில் கலக்கும் ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ முதன்முறையாக ஓடிடி தளத்தில் தன் முத்திரையைப் பதிக்கவிருக்கிறது.

Published:Updated:
தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
தமன்னா

‘கர்ணன்’ படம் கமிட்டாவதற்கு முன்னரே சிவகார்த்திகேயனிடம் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கிவைத்திருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். சில படங்களை முடித்துவிட்டு வருவதாக சிவா சொல்ல, ‘கர்ணன்’ படத்தில் பிஸியாகிவிட்டார் மாரி. ‘கர்ணன்’ பெரிதாக ஹிட் அடிக்க... தனுஷ் - மாரி கூட்டணி மீண்டும் இணைகிறது. சிவகார்த்திகேயன் ஓகே பண்ணி வைத்திருந்த கதையைத்தான் இப்போது தனுஷ் டிக் அடித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

‘கிடாரி’, ‘வெற்றிவேல்’ படங்களில் சசிகுமாருடன் இணைந்து நடித்த நிகிலா விமல், மலையாளத்தில் நல்ல கவனம் பெற்றிருக்கிறார். ஆனால், தமிழில் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. லேட்டஸ்ட்டாக உடை விஷயத்தில் தாராளம் காட்டி ஸ்டில் ஷூட் நடத்திய நிகிலா விமல், ‘நல்ல வாய்ப்புகளுக்காகச் சம்பளத்தைக் குறைக்கவும் தயார்’ எனச் சொல்லியிருக்கிறார். இந்த வருடம் தமிழில் சாதித்தே தீருவது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

சின்னத்திரை சீரியல்கள், யூடியூப் டெய்லி சீரிஸ் என்று டாப் கியரில் கலக்கும் ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ முதன்முறையாக ஓடிடி தளத்தில் தன் முத்திரையைப் பதிக்கவிருக்கிறது. விகடன் டெலிவிஸ்டாஸின் படைப்பாக, புதுமுக இயக்குநர் ராமின் இயக்கத்தில் தமன்னா, ஜி.எம்.குமார், பசுபதி ஆகியோரின் நடிப்பில் ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது. செம ஸ்டைலிஷ் மேக்கிங், திடீர் ட்விஸ்ட்டுகள் என்று தயாராகியிருக்கும் இந்த த்ரில்லர், மே 20-ம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்!

‘நாட்படு தேறல்’ என்கிற தலைப்பில் பாடல்கள் எழுத, பலரையும் ஒருங்கிணைத்து, அதைக் காட்சி வடிவமாகவும் மாற்றினார் கவிப்பேரரசு வைரமுத்து. சமீபத்தில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ எனத் தொடங்கும் பாடலை எழுதிய வைரமுத்து, அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். திரையுலகைச் சேர்ந்த பலரும் அதைப் பார்த்துப் பாராட்ட, நெகிழ்ந்துபோயிருக்கிறார் கவிப்பேரரசு. படத்தில் நடிக்கச் சொல்லியும் சிலர் கேட்க, கூச்சத்தோடு தவிர்த்துவிட்டாராம்!

சிம்புவின் ‘மாநாடு’ படம் குறித்து வருடக்கணக்கில் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ‘படம் எப்போ சார் வரும்?’ என ரசிகர்கள் கேட்க, மறுபடியும் படத்தில் நடிப்பவர்கள் குறித்த அப்டேட்டையே கொடுத்துக்கொண்டிருக்கிறது தயாரிப்பு தரப்பு. ‘பில்டப் கொடுத்தது போதும், ஷூட்டிங்கை ஃபினிஷ் பண்ணுங்கப்பா’ எனக் கொந்தளிக்கிறார்கள் சிம்பு விசிறிகள்.

உஷ்...

கொரோனா பரவல் பலரையும் திகிலடையவைத்திருக்க, திருமணத்துக்குத் தயாராகிவரும் நயமான நடிகையோ மாஸ்க் போடுவதைக்கூடத் தவிர்க்கிறாராம். சூப்பர் நடிகரின் படத்துக்காக நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்டிஸ்ட் இருந்த ஸ்பாட்டில்கூட மாஸ்க் போடாமலேயே திரிந்தாராம். தயாரிப்பு தரப்பில் சூப்பர் நடிகர் புகார் செய்த பிறகே, மாஸ்க் அணிந்தாராம் அம்மணி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism