அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மாளவிகா மோகனன் - பிரியா பவானி சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
மாளவிகா மோகனன் - பிரியா பவானி சங்கர்

கொரோனா முடிந்ததும் ‘இந்தியன்-2’ படத்துக்கான பணிகள் தொடங்கும்

* ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யுடன் ரொமான்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்தான், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் ‘அருவா’ படத்தின் ஹீரோயின். ‘மாஸ்டர்’ ரிலீஸுக்குப் பிறகு மாளவிகாவின் மார்க்கெட் பயங்கரமாக உயரக்கூடும் என்பதால், ஊரடங்கு காலத்திலேயே பெரிய சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் மாளவிகா. இதற்கிடையே ‘அருவா’ படத்தின் டைட்டில் மாற்றத்துக்கும் தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன.

* ‘மாஸ்டர்’ படம் முடிந்துவிட்டது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க விருக்கிறார் விஜய். இந்தப் படத்துக்கு, தமன் இசையமைக்கிறார். முதன்முறையாக இந்தக் கூட்டணியோடு இணைகிறார் தமன். ‘பாய்ஸ்’ படத்தில் நடிகராக அறிமுகமான தமன், அதன் பிறகு தெலுங்கில் மிகப்பெரிய இசையமைப் பாளராக உயர்ந்தார். தமிழில் சில படங்களுக்கு இவர் இசையமைத்தி ருந்தாலும், தெலுங்குப் படங்கள்தான் இவருக்கு ஹிட் கொடுத்தன. சமீபத்தில் அல்லு அர்ஜுனின் ‘அல வைகுந்தபுரமுலு’ படத்தில் இவர் இசையமைத்த ‘புட்டபொம்மா...’ பாடல் உலக வைரைல். இந்த நிலையில்தான் தமனை விஜய்யின் அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் செய்திருக் கிறார்கள்.

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

* 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக, எப்படியாவது ‘இந்தியன்-2’ படத்தை திரைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் கமல்ஹாசன். பிப்ரவரி மாதம் பூந்தமல்லி அருகே ‘இந்தியன்-2’ படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு மூன்று பேர் இறந்ததால், ஷூட்டிங் அப்படியே நின்றுபோனது. இதன் பிறகு லைகாவுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே மனக்கசப்பு எழுந்தது. இந்த நிலையில் ‘இந்தியன்-2’ படத்திலிருந்து லைகா விலகலாம் என செய்திகள் பரவ, அதில் உண்மையில்லை என்கிறார்கள் கமலுக்கு நெருக்கமானவர்கள். தொடர்ந்து லைகா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகச் சொல்கின்றனர். கொரோனா முடிந்ததும் ‘இந்தியன்-2’ படத்துக்கான பணிகள் தொடங்கும் எனத் தெரிகிறது.

* ‘மேயாத மான்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமான பிரியா பவானி சங்கர், ஆஸ்திரேலிய தமிழர் ஒருவரைக் காதலித்துவந்தார். இதை, கடந்த காதலர் தினத்தன்று இன்ஸ்டாகிராமில் வெளிப்படையாகவே அறிவித்தார். ஆனால், தற்போது இருவரும் பிரேக்-அப்பில் இருக்கிறார்கள் என செய்திகள் பறக்கின்றன. ஃபேஸ்புக்கில் ‘தனிமையின் வலி’ என, பிரியா ஒரு பெரிய போஸ்ட் போட்டதுதான் பிரேக்-அப் செய்திகள் பரவ காரணமாம்.

பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்

*கொரோனா பிரச்னையால் திரையுலகிலும் காஸ்ட் கட்டிங் வேலைகள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன. சில நடிகர்கள், இயக்குநர்கள் தாமாக முன்வந்து தங்கள் சம்பளத்தில் 25 சதவிகிதத்தைக் குறைத்துவரும் நிலையில், தயாரிப்பு நிறுவனங்களும் தாங்கள் தற்போது தயாரித்துவரும் படங்களின் பட்ஜெட்டைக் குறைக்க ஆரம்பித்திருக்கின்றன. இதில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுவரும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பட்ஜெட்டும் குறைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.