அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

அஞ்சலி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சலி

`அரண்மனை 3’ படத்தை ஓடிடி-யில் விட்டுவிடலாமா அல்லது தியேட்டரில் நேரடியாக ரிலீஸ் செய்யலாமா என்கிற ஆழ்ந்த யோசனையில் இயக்குநர் சுந்தர்.சி இருக்கிறாராம்

`ஜோக்கரி’ல் மேக்கப்பே இல்லாமல் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இப்போது சரமாரியாக போட்டோ ஷூட் எடுத்து எல்லா இயக்குநர்களின் பார்வைக்கும் அனுப்பியிருக்கிறார். போட்டோக்களைப் பார்த்த பல இயக்குநர்கள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்ததுபோல ‘ஷாக்’ ஆகியிருக்கிறார்கள். `காரணம், ரம்யா கொடுத்திருந்த கவர்ச்சி போஸ்கள் அப்படி...’ என்கிறது தமிழ் சினிமா உலகம்.

`அரண்மனை 3’ படத்தை ஓடிடி-யில் விட்டுவிடலாமா அல்லது தியேட்டரில் நேரடியாக ரிலீஸ் செய்யலாமா என்கிற ஆழ்ந்த யோசனையில் இயக்குநர் சுந்தர்.சி இருக்கிறாராம். அப்படியே தியேட்டரில் ரிலீஸ் செய்தாலும் 100 சதவிகித இருக்கை இருந்தால்தான் லாபம் பார்க்க முடியும் என்பதால் காத்திருக்கிறார் மனிதர். ஆனால், ‘எது நடந்தாலும் தியேட்டரில்தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்’ என்பதில் தீர்மானமாக இருக்கிறாராம் குஷ்பு.

‘சாம் ஜாம்’ என்ற நிகழ்ச்சியை ‘ஆஹா’ நிறுவனத்துக்காகத் தொகுத்து வழங்கிவருகிறார், சமந்தா. அதில் கலந்துகொண்ட பெண் ஒருவர், தனது தாய், தந்தை இறந்த பிறகு, தன்னுடைய ஏழு சகோதரிகளையும் ஆட்டோ ஓட்டி பார்த்துக்கொள்வதாக உருக்கமாகத் தெரிவித்திருந்தார். அந்தப் பெண்ணுக்கு 12.5 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றைப் பரிசாக வழங்கி, அவரை நெகிழவைத்திருக்கிறார், சமந்தா.

மிஸ்டர் மியாவ்

‘பிங்க்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘வக்கீல் சாப்’ படத்தில் நடித்த அஞ்சலி, அடுத்ததாக, ‘F3’ என்ற படத்தில் வெங்கடேஷுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘F2’ படத்தில் நடித்த தமன்னா, மெஹ்ரீன் அகியோர் இந்தப் படத்திலும் இருக்கிறார்கள். மூன்றாவதாக அஞ்சலியும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்.

உஷ்!

டெட்லி
காம்போவாகப் பார்க்கப்பட்ட அந்த மூன்றெழுத்து நடிகர் - மூன்றெழுத்து இயக்குநர் இணை நான்காவது முறை யாக இணையவிருக்கிறது. அக்கட தேசத்திலுள்ள மூன்றெழுத்துப் பேரன் நடிகரும் இணைய வாய்ப்பிருப்பதால், பைலிங்குவலாக வர அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.