Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஐஸ்வர்யா ராஜேஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா ராஜேஷ்

‘முதிர்ச்சியான கேரக்டர்கள் வேண்டாம்’ என மறுக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ‘‘யூத்ஃபுல்லான லவ் சப்ஜெக்ட் இருந்தா சொல்லுங்க’’ என்கிறாராம் கறாராக

மிஸ்டர் மியாவ்

‘முதிர்ச்சியான கேரக்டர்கள் வேண்டாம்’ என மறுக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ‘‘யூத்ஃபுல்லான லவ் சப்ஜெக்ட் இருந்தா சொல்லுங்க’’ என்கிறாராம் கறாராக

Published:Updated:
ஐஸ்வர்யா ராஜேஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா ராஜேஷ்

கொரோனா பாதிப்புக்கு ஆளாகி அப்போலோவில் சேர்க்கப்பட்ட இயக்குநர் வசந்தபாலனுக்கு மிக முக்கிய மருந்து ஒன்று தேவைப்பட்டிருக்கிறது. அதற்காக இயக்குநர் லிங்குசாமி அரசுத் தரப்பில் முட்டி மோதிப் பார்த்திருக்கிறார். ஒருகட்டத்தில் விஷயம் உதயநிதி காதுக்குப் போக, சில மணி நேரங்களில் அந்த மருந்தை அப்போலோ மருத்துவர்களிடம் கொண்டுசேர்த்திருக்கிறார். நண்பர்களின் உதவியால் இப்போது நலமாகிவருகிறார் வசந்தபாலன்.

‘சூரரைப் போற்று’ படம் ரிலீஸானபோதே கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 5 கோடி ரூபாய் கொடுத்தார் சூர்யா. தற்போது தமிழக அரசின் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் கொடுக்க நினைத்தாராம். ‘ஏற்கெனவே கொடுத்த தொகை போதுமே’ எனச் சிலர் அட்வைஸ் பண்ண, ‘கொரோனா கஷ்டத்தை நானும் அனுபவிச்சிருக்கேன். எனக்குக் கிடைச்ச மருத்துவம் எல்லாருக்கும் கிடைக்கணும்’ எனச் சொல்லி, தொகையை ஒரு கோடியாக உயர்த்திக் கொடுத்திருக்கிறார் சூர்யா.

மிஸ்டர் மியாவ்

‘முதிர்ச்சியான கேரக்டர்கள் வேண்டாம்’ என மறுக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ‘‘யூத்ஃபுல்லான லவ் சப்ஜெக்ட் இருந்தா சொல்லுங்க’’ என்கிறாராம் கறாராக. ‘‘திருமணம் ஆனவளா, தாயா நான் எப்போ வேணும்னாலும் நடிக்கலாம். யூத்தா இப்போதானே நடிக்க முடியும்?’’ என அதற்குக் காரணம் சொல்கிறார் ஐஸ்.

‘த்ரிஷ்யம் 2’ படத்தின் பெரிய வெற்றி நடிகை மீனாவை மீண்டும் பரபரப்பாக்கிவிட்டது. தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நடிக்கிறார். இதற்கிடையில் பல இயக்குநர்கள் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளைச் சொல்ல, அவற்றில் அட்டகாசமான இரண்டு கதைகளை ஓகே செய்திருக்கிறார் மீனா. அவரின் அமர்க்களமான ரீஎன்ட்ரிக்கு இந்த இரண்டு படங்களும் உதவுமாம்.

‘தில்லுக்கு துட்டு’ கன்னட ரீமேக் தயாரிப்பாளர் தீபக், அடுத்து சந்தானத்தை ஹீரோவாக வைத்து படமெடுக்க நினைத்தார். இதற்கிடையில் கொரோனாவால் அவர் பாதிக்கப்பட, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்குத் தேவையான உதவிகளைச் செய்திருக்கிறார் சந்தானம். ஆனாலும் தீபக்கை காப்பாற்ற முடியாமல் போக, ரொம்பவே துடித்துப்போனாராம் சந்தானம். ‘தீபக் எடுக்க நினைத்த படம் நிச்சயம் நடக்கும்’ என இப்போது நம்பிக்கை கொடுத்திருக்கிறார் சந்தானம்.

உஷ்…

சூப்பர் நடிகரின் அடுத்த படத்தை அவர் மருமகனே இயக்க விரும்புகிறார். அதற்காக பக்காவாகக் கதையும் ரெடி செய்து வைத்திருக்கிறார். ஆனால், மாமனார் பிடிகொடுக்க மறுக்கிறாராம். ‘ஹாலிவுட் வரை போய் வரிசையா ஹிட் கொடுத்துக்கிட்டு இருக்கிற நடிகருக்கு எதுக்கு டைரக்‌ஷன்?’ என்கிறாராம் அக்கறையோடு!