Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ராய் லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
ராய் லட்சுமி

‘அடுத்த போட்டோ ரிலீஸ் பாருங்க… அமர்க்களமா இருக்கும்’ என்கிறார்கள் அனுஷ்கா ஆர்வலர்கள்.

மிஸ்டர் மியாவ்

‘அடுத்த போட்டோ ரிலீஸ் பாருங்க… அமர்க்களமா இருக்கும்’ என்கிறார்கள் அனுஷ்கா ஆர்வலர்கள்.

Published:Updated:
ராய் லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
ராய் லட்சுமி

வெற்றி தோல்விகளை சட்டையே செய்துகொள்ளாமல் தொடர்ந்து சாதிக்க முயல்பவர் ராய் லட்சுமி. பக்காவாக அவர் முடித்துக் கொடுத்த இரண்டு படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்க, தன் ரசிகர்களைக் காக்க வைக்கக் கூடாது என சமூக வலைதளங்களில் போட்டோ, வீடியோ என அப்டேட் செய்து அசத்துகிறார் அம்மணி. சமீபகாலமாக கொரோனா நெருக்கடிகளையெல்லாம் கடந்து அம்மணியின் கவர்ச்சி தரிசனம் அதிகமாகி, அநியாயத்துக்கு ரசிகர்களைச் சூடேற்றுகிறது.

அனுஷ்கா மிக குண்டாக இருப்பது போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளியானது. ‘இனி அவருக்கு சினிமா வாய்ப்புகள் அவ்வளவு சீக்கிரத்தில் அமையாது’ என அந்தப் புகைப்படத்தைவைத்தே பரபரப்பு கிளப்பிவிட்டன மீடியாக்கள். உண்மையில் அந்தப் புகைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டதாம். இப்போது அனுஷ்கா நல்லபடியாக உடலைக் குறைத்து வருகிறாராம். ‘அடுத்த போட்டோ ரிலீஸ் பாருங்க… அமர்க்களமா இருக்கும்’ என்கிறார்கள் அனுஷ்கா ஆர்வலர்கள்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்‌ஷ்மண் தயாரிப்பில் பிரமாண்டமான அடுத்த படத்தில் களமிறங்குகிறார் சசிகுமார். கிராமம், நகரம் என இரு களங்களில் மாடுகளையும் குதிரைகளையும் மையப்படுத்துகிற கதையாம். ‘இது என் வாழ்வில் மிக முக்கியமான படமாக இருக்கும்’ என நெருங்கியவர்களிடம் படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்துக்கொண்டிருக்கிறார் சசிகுமார்.

மிஸ்டர் மியாவ்

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் எந்த நேரத்திலும் ரிலீஸுக்கு ரெடி என்கிற அளவுக்கு பக்காவாகத் தயாராகிவிட்டது. கொரோனா நெருக்கடிகள் முடிந்து படத்தைத் தியேட்டரில் ரிலீஸ் செய்ய நினைக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால், படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. ‘சிவாவின் எண்ணப்படியே நடக்கட்டும்’ எனத் தயாரிப்பாளர் நினைக்க, அவரே மலைத்துப்போகிற அளவுக்குப் படத்துக்கு விலையை அதிகமாக்கிவருகின்றன ஓடிடி நிறுவனங்கள்.

காமெடி, ஆக்‌ஷன் எனக் கிடைத்த வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த ‘கில்லி’ மாறன், நல்ல பாத்திரத்துக்காகக் காத்திருப்பதாக இயக்குநர் இரஞ்சித்திடம் அடிக்கடி சொல்வாராம். இதை மனதில் வைத்து ‘சார்பேட்டா’ படத்தில் ‘மாஞ்சா கண்ணன்’ என்கிற பாத்திரத்தை இரஞ்சித் உருவாக்கிக் கொடுக்க, மாறன் பிரமாதப்படுத்திவிட்டாராம். படம் ரிலீஸுக்குத் தயாரான நிலையில் கொரோனாவால் மாறன் மறைய, மொத்தப் படக்குழுவும் இடிந்துபோய்விட்டது.

உஷ்...

நட்பு, அன்பு என யாரைக் கண்டாலும் கன்னத்தில் முத்தமிடும் கதாநாயகன், கொரோனா நெருக்கடி நேரத்திலும் ஓரிடத்தில் தங்க மறுக்கிறாராம். மாஸ்க், சானிடைஸர், சமூக இடைவெளி என எதையும் ஃபாலோ பண்ணாமல் இஷ்டத்துக்குத் திரிபவர், ‘நம்ம வாழ்க்கை நம்ம கையில இல்லை’ எனத் தத்துவம் வேறு பேசுகிறாராம். அவரின் முத்தத்துக்காக ஏங்கியவர்கள்கூட இப்போது அவரைக் கண்டதும் காத தூரம் ஓடுகிறார்கள்.