Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ராஷ்மிகா மந்தனா
பிரீமியம் ஸ்டோரி
ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா, தமிழில் பக்காவான இடத்தைப் பிடித்தே தீர வேண்டும் எனத் தீவிரமாகக் கதை கேட்டுவருகிறார்.

மிஸ்டர் மியாவ்

ராஷ்மிகா, தமிழில் பக்காவான இடத்தைப் பிடித்தே தீர வேண்டும் எனத் தீவிரமாகக் கதை கேட்டுவருகிறார்.

Published:Updated:
ராஷ்மிகா மந்தனா
பிரீமியம் ஸ்டோரி
ராஷ்மிகா மந்தனா

நடிக்கிற வாய்ப்புகள் குறைந்துபோனாலும், நமீதா இப்போது கதை கேட்கும் வேலைகளில் செம பிஸி. ‘நமீதா தியேட்டர்ஸ்’ என்கிற பெயரில் ஓடிடி தளத்தைத் தொடங்கியிருக்கும் நமீதா அதற்காக, தீவிரமாகக் கதை கேட்டுவருகிறார். நிஜ சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்ட கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். ‘புதுமுக இயக்குநர்களுக்கு இது பெரிய வரமாக இருக்கும்’ என நமீதா சொல்ல, ‘ஷூட்டிங்கில் தலையிடுவதுபோல் கதை கேட்பதிலும் உங்க கணவர் தலையிடாமல் இருக்கணுமே...’ என்கிறார்கள் கதை சொல்லக் காத்திருக்கும் இயக்குநர்கள்.

இயக்குநர் பாலா தொடங்கி முத்தையா வரை பலரும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் கதையைப் படமாக்கப்போவதாகச் சொன்னார்கள். ஆனால், அந்த முயற்சிகள் இழுத்துக்கொண்டே போக, ஒளிப்பதிவாளர் வேல்ராஜுடன் உட்கார்ந்து அடுத்த கதையை உருவாக்கியிருக்கிறார் வேல ராமமூர்த்தி. பக்கா வாழ்வியல் கதையில் அசந்துபோன வேல்ராஜ், படத்தைத் தானே தயாரிப்பதாகச் சொல்லியிருக்கிறாராம்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

ராஷ்மிகா மந்தனாவுக்குத் தமிழிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தெலுங்கில் அறிமுகமான காலகட்டத்தில் ராஷ்மிகா ஒருவரைக் காதலித்த கதை, அவருக்கு எதிரான சர்ச்சையாக வெடித்துவருகிறது. ‘ராஷ்மிகா சுயநலவாதி. அதனால்தான் என்னைக் கழற்றிவிட்டார்’ என முன்னாள் காதலரே குற்றம்சாட்ட, ராஷ்மிகா அதையெல்லாம் சட்டையே செய்துகொள்ளவில்லை. “பரபரப்பா நாம முன்னேற இந்த மாதிரி நெகட்டிவ் பப்ளிசிட்டியும்தான் தேவை” எனச் சொல்லும் ராஷ்மிகா, தமிழில் பக்காவான இடத்தைப் பிடித்தே தீர வேண்டும் எனத் தீவிரமாகக் கதை கேட்டுவருகிறார்.

மிஸ்டர் மியாவ்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்துக்காக பிரமாண்ட செட் போடும் வேலைகள் நடந்தன. இருவிதமான பாத்திரங்களில் கார்த்தி நடிப்பதால், ஒரு கெட்டப் ஷூட் முடிவதற்கும், செட் வேலைகள் முடிவதற்கும் சரியாக இருக்கும் என நினைத்தது படக்குழு. ஆனால், கொரோனா நெருக்கடிகள் வேறு மாதிரியாக அமைய, ‘செட்டுக்கும் வாடகைக்குமே செலவு ஜாஸ்தியாகிடும் போலிருக்கே’ என யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் தயாரிப்பாளர் தரப்பில்.

விகடன் நிறுவனத் தயாரிப்பில், ஹாட் ஸ்டாரில் ரிலீஸாகியிருக்கும் ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரீஸுக்கு ஏகோபித்த வரவேற்பு… யாரும் கணிக்க முடியாதபடி ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்டாக உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதையும் மேக்கிங்கும் புதிய அனுபவத்தைக் கொடுப்பதாகக் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். நிதானம், பொறுப்பு, அர்ப்பணிப்பு எனக் குடும்பத்தைத் தாங்கும் பெண்ணாக மிக இயல்பான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கும் தமன்னாவுக்குப் பல திசைகளிலிருந்தும் பாராட்டு மழை! இதுவரை நாம் பார்த்திராத இருட்டுப் பக்கங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்திருக்கும் ‘நவம்பர் ஸ்டோரி’ கதையை ‘தமிழில் ஓர் உலகத்தரமான வெப் சீரீஸ்’ என வியக்கிறார்கள் இணையவாசிகள்!

உஷ்...

கொரோனா நெருக்கடியால், ‘பிரபல புதினத்தை’ தழுவி எடுக்கப்படும் படத்தின் ஷெட்யூல் அநியாயத்துக்குக் குழப்பமாகிவிட்டதாம். நடிகர்கள் பலரும், ‘நாங்கள் ஒதுக்கிய நாள்கள் முடிந்துவிட்டன’ எனச் சொல்லி விலகிக்கொள்ளப் பார்க்கிறார்களாம். பெல் இயக்குநர் தலையிட்டுப் பேசிய பிறகும் நடிகர்களைச் சமாளிப்பது பெரும் தலைவலியாக இருக்கிறதாம்!