Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

நயன்தாரா - த்ரிஷா மோதல் இன்னமும் முடிவுக்கு வரலையா?

மிஸ்டர் மியாவ்

நயன்தாரா - த்ரிஷா மோதல் இன்னமும் முடிவுக்கு வரலையா?

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகமாகும் ‘விடுதலை’ பட ஃபர்ஸ்ட் லுக் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஆனாலும், படத்துக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களிலும், தினசரி பத்திரிகை விளம்பரங்களிலும் விஜய் சேதுபதி இருக்கிற டிசைன் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது. ‘‘நம்மளை கதாநாயகன்னு சொல்லிட்டு விஜய் சேதுபதியை மட்டுமே முன்னிறுத்துறாங்களே…’’ என முணுமுணுத்திருக்கிறார் சூரி.

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’, த்ரிஷாவின் ‘ராங்கி’ இரண்டு படங்களையும் ஓடிடி தளத்தில் வெளியிட நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. ஒருவர் படத்தின் விலை தெரிந்தால்தான், இன்னொரு படத்தை விற்க முடியும் என இரு படங்களின் தயாரிப்புத் தரப்பும் மல்லுக்கட்ட, பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே போகிறதாம். #நயன்தாரா - த்ரிஷா மோதல் இன்னமும் முடிவுக்கு வரலையா?

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

இந்தி, தெலுங்கைவிட, தமிழ்த் திரையுலகில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் நிதி அகர்வாலின் ஒரே இலக்கு. அவர் நடித்த ‘பூமி’, ‘ஈஸ்வரன்’ இரண்டும் சரியாகப் போகாததால், அடுத்து விஜய் படத்தில் எப்படியாவது ஜோடிபோடத் துடித்தார். அந்த இடத்தை பூஜா ஹெக்டே கொத்திக்கொண்டு போக, அடுத்து ‘விஜய் 66’ படத்தை டார்கெட்வைத்து முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். ‘‘ஒரே ஒரு முறை விஜய் சாரைச் சந்திக்க ஏற்பாடு பண்ணுங்க. நிச்சயம் அவரோட அடுத்த படத்துல நான் இருப்பேன்” என நிதி அகர்வால் சொல்ல, மீடியேட்டர்கள் மிரண்டுகிடக்கிறார்கள்.

‘இம்சை அரசன்’ இரண்டாம் பாகத்தில் தொடங்கிய பிரச்னை வடிவேலுவை ஒரேயடியாக முடக்கிவிட்டது. ‘எந்தப் படத்திலும் வடிவேலுவை புக் பண்ணக் கூடாது’ எனத் தயாரிப்பாளர்கள் தரப்புக்கு ஆஃப் தி ரெக்கார்ட் உத்தரவு போடப்பட்டது. இந்தநிலையில் லைகா நிறுவனத் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுடன் போனில் பேசி பிரச்னையை ஒருவழியாக முடித்திருக்கிறார் வடிவேலு. அடுத்த மாதத்துக்குள் வடிவேலு நடிக்க கிரீன் சிக்னல் கிடைத்துவிடுமாம்.

உஷ்...

தெலுங்கு வாடை வீசிய தம்பி நடிகரின் சமீபத்திய படம் சரியாகப் போகவில்லை. ‘சம்பந்தமே இல்லாமல் வைக்கப்பட்ட டைட்டிலும் அதற்கு ஒரு காரணம்’ எனச் சிலர் அறிவுறுத்தினார்கள். இந்தநிலையில் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக்கும், டைட்டிலும் அதே பாணியில் அறிவிக்கப்பட, ‘இந்த மனுஷன் வீம்புக்காகவே பண்றார்’ என அட்வைஸ் புள்ளிகள் ஒதுங்கிக்கொண்டார்களாம்.