சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

விஜயசாந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
விஜயசாந்தி

பாரதிராஜாவும் இளையராஜாவும்

  • மகேஷ் பாபு, ரஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் தெலுங்குத் திரைப்படம் ‘சரிலேரு நீக்கெவரு’. முக்கிய வேடங்களில் விஜயசாந்தி, பிரகாஷ்ராஜ் நடித்துக்கொண்டிருக்கும் இந்தப் படம், கிராமத்துப் பின்னணியில் உருவாகிறது. ஒரு பாடல் காட்சிக்காக பொள்ளாச்சிக்குச் சென்றிருக்கிறது படக்குழு.

  • ‘வலிமை’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இயக்குநர் ஹெச்.வினோத்தின் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடிக்கிறாராம் நஸ்ரியா.

 நஸ்ரியா
நஸ்ரியா
  • நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜாவும் இளையராஜாவும்ஒன்றுகூடியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் சந்தோஷச் செய்தி. சந்திப்பு நடைபெற்ற இடம், தேனி. பிரசாத் ஸ்டூடியோவுடன் இளையராஜாவுக்குப் பிரச்னை ஏற்பட்டபோது, அதன் உரிமையாளருக்குப் பறந்த முதல் போன் பாரதிராஜாவுடையதுதானாம்!

  • ‘ரெண்டு’ படத்தையடுத்து மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன், அனுஷ்கா இணைந்து நடிக்கும் படம் ‘நிசப்தம்’. இதில் காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக அனுஷ்கா நடிக்கிறார். நடிகை அஞ்சலி, துப்பறியும் அதிகாரியாக நடிக்கிறார். இசைக்கலைஞராக மாதவன் நடிக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது.

மிஸ்டர் மியாவ்
  • அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. விஜய் கேரக்டரில் ரவி தேஜாவும், ஏமி ஜாக்சன் கேரக்டரில் ஸ்ருதிஹாசனும் நடிக்கின்றனர். விரைவில் இது இந்தியிலும் ரீமேக் ஆகும் என்கிறார்கள்.

ம்யூட்

  • சிங் நடிகை தமிழில் நடித்த சமீபத்திய படங்கள் சரியாகப் போகவில்லை. தற்போது அந்த நடிகை பெரிய பட்ஜெட் இயக்குநரின் படத்திலும் நடித்துவருகிறார். அடுத்து அவருக்கு வேறு படங்களுக்கான அழைப்புகள் வராததால், தனது பழைய ஃபிட்னஸ் பிசினஸைக் கவனிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

  • படம்குறித்த நெகட்டிவ் விமர்சனங்களால் ‘சி.எம்’ நடிகர் ரொம்பவே அப்செட்டாம். உருவத்தைக் கேலிசெய்த காட்சியைப் படமாக்கும்போதே ‘இந்த சீன் தேவைதானா?’ என்று அதிருப்தியை வெளிப்படுத்தினாராம் நடிகர். அவருக்கு சமாதானம் கூறி எடுக்கப்பட்ட அந்தக் காட்சிகளைத்தான் இப்போது வறுத்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். இந்த வருத்தத்தை இப்போது இயக்குநரிடம் சூடாகவே கூறிவிட்டாராம் நடிகர்!