Published:Updated:

மிஸ்டர் மியாவ்

கீர்த்தி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
கீர்த்தி சுரேஷ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கவிருக்கிறார் அமலா

மிஸ்டர் மியாவ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கவிருக்கிறார் அமலா

Published:Updated:
கீர்த்தி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
கீர்த்தி சுரேஷ்
  • நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கவிருக்கிறார் அமலா. எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் புதிய படத்தில் இவர்தான் நாயகி. இவருக்கு ஜோடியாக இசையமைப்பாளர் அனிருத்தின் அப்பா ரவி ராகவேந்திரா நடிக்கிறார். படத்தை, அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்குகிறார்.

அமலா
அமலா
  • அப்பாடா, பிரச்னைகள் ஒருவழியாகத் தீர்ந்துவிட்டன! ‘மாநாடு’ படத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் சிம்பு. படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பாக ஓர் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். சபரிமலைக்கு ஒரு மண்டலக் காலம் விரதமாம். அதன் பிறகு நடிப்பில் சின்ஸியராக கவனம் செலுத்துவார் என்கிறது அவரின் குடும்பம்.

சிம்பு
சிம்பு
  • கமல்ஹாசன் ரசிகரான லோகேஷ் கனகராஜ், அடுத்து ராஜ்கமல் நிறுவனப் பட இயக்குநர் ஆகிறார். விஜய் படம் முடிந்ததும் கமல் தயாரிப்பில் இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் ‘பிக் பாஸ்’ தர்ஷன் நடிக்கிறார். கமல்ஹாசனை முக்கிய கேரக்டரில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினியின் புதிய படத்துக்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. டிசம்பரில் ஷூட்டிங் தொடங்கவிருக்கும் நிலையில், ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாராம். காமெடிக்கு சூரி, ரோபோ சங்கர் ஆகியோரை படத்தில் சேர்த்திருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்
  • ராம்சரண், சமந்தா நடிப்பில் தெலுங்கில் ரிலீஸான திரைப்படம் ‘ரங்கஸ்தலம்’. விவசாயப் பின்னணிகொண்ட இந்தப் படம், தற்போது தமிழில் ரீமேக் ஆகவிருக்கிறது. தமிழ் உரிமையை வைத்திருக்கும் ராகவா லாரன்ஸே இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லிங்குசாமி இயக்குகிறார்.

ம்யூட்

  • படத்தை மீண்டும் முதலில் இருந்து எடுத்தும், பப்ளிசிட்டிக்காக பெரியளவில் செலவு செய்தும் படத்துக்கான எதிர்பார்ப்பு இல்லாததால் வருத்தத்தில் இருக்கிறதாம் அப்பா - மகன் கூட்டணி. இதனால் திட்டமிட்ட நாளில் படத்தையும் ரிலீஸ் செய்ய முடியவில்லையாம்!

  • தொடர்ந்து ஃப்ளாப் கொடுத்துவந்த வடக்கின் ஸ்டார் நடிகர், தன் பிறந்த நாளில் புதுப்பட அறிவிப்பை வெளியிட இருந்தார். வெறித்தனமான தமிழ் இயக்குநர்தான் படத்தை இயக்குவதாகப் பேச்சு. ஆனால், அந்த இயக்குநரின் லேட்டஸ்ட் ரிலீஸ் கடுமையான விமர்சனங்களைச் சந்திக்கவே, குழப்பத்தில் இருக்கிறதாம் நடிகர் தரப்பு. இதற்கிடையே, அசுரத்தனமான தமிழ் இயக்குநரின் படத்தில் நடிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறதாம் நடிகர் தரப்பு.