ஜோதிகா - கார்த்தி நடிப்பில் மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்துக்கான பெயரை இன்னும் வெளியிடாமல் இருக்கிறார்கள். அக்கா - தம்பி பாசக்கதையான இந்தப் படம் டிசம்பரில் ரிலீஸாகிறது. படத்தின் பெயர் ‘தம்பி’ எனக் கிசுகிசுக்கிறது கோலிவுட்.

சல்மான் கானை வைத்து ‘ராதே’ என்ற இந்திப் படத்தை இயக்கிவருகிறார் பிரபுதேவா. இதில் முக்கியமான ரோலில் பரத் நடிக்கிறார்.

சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தையடுத்து சூர்யாவுடன் இணைகிறார் இயக்குநர் வெற்றி மாறன். படத்தைத் தயாரிக்கிறார் எஸ்.தாணு.

‘எல்.கே.ஜி’ படத்துக்குப் பிறகு நீண்டகாலம் சத்தமில்லாமல் இருந்த ஆர்.ஜே.பாலாஜி, மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். ‘மூக்குத்தி அம்மன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். தயாரிப்பு, ஐசரி கே.கணேஷ்.

மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியில் செல்வன்’ படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்குகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் இந்தப் படத்தில், தற்போது ஜெயம் ரவியின் மகன் ஆரவும் இணைந்திருக்கிறார்.

கணவரைப் பிரிந்து வாழும் மான் நடிகை பழைய இயக்குநர்களை தொடர்ந்து தனிமையில் சந்திக்கிறாராம். வாய்ப்புக்காக அல்ல... நட்புக்கான சந்திப்பாம்!

இரண்டு கோடி ரூபாய் செலவில் தன்னுடைய மேக்கப் மேனுக்கு வீடு வாங்கித் தந்திருக்கிறார் உச்ச நடிகை. பல ஆண்டுகளாக ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை யாரும் நெருங்கிவிடாமல் கவனித்துக் கொண்டதற்காகத்தான் இந்த நன்றிக்கடனாம்!