Published:Updated:

மிஸ்டர் மியாவ்

நயன்தாரா நடிக்கவிருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள்.

பிரீமியம் ஸ்டோரி
  • மிகத் தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார் ஜோதிகா. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியுடன் நடித்து முடித்திருக்கும் ஜோதிகா, அடுத்து அறிமுக இயக்குநரின் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துககுப் பிறகு ‘கத்துக்குட்டி’ இயக்குநர் ஆர்.சரவணன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தில் சசிகுமார், சூரி மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஜோதிகா
ஜோதிகா
  • மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது. ‘அசுரன்’ போலவே இதன் படப்பிடிப்பும் கோவில்பட்டியில்தான் நடக்க இருக்கிறது.

  • மலையாளத்தில் ப்ரித்விராஜ் நடிக்கும் திரைப்படம், ‘ஆடு ஜீவிதம்’. இந்தப் படத்துக்கு இசை, ஏ.ஆர்.ரஹ்மான். 1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ரஹ்மான், அதே ஆண்டில் மோகன்லாலின் மலையாளப் படமான ‘யோதா’வுக்கும் இசையமைத்தார். மீண்டும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளக் கரையோரம் ஒதுங்கியிருக்கிறார் ரஹ்மான். இவரின் இசையில் சின்மயி மற்றும் விஜய் யேசுதாஸ் ஆகியோர் பாடி முடித்திருக்கிறார்கள்.

Dhanush, Prithviraj
Dhanush, Prithviraj
  • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் தற்போது கேரளாவின் ஆலப்புழாவில் நடக்கிறது. இந்தப் படத்துக்காக நீண்ட தலைமுடியுடன் வலம்வருகிறார் விக்ரம்.

Nayanthara
Nayanthara
  • ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நான்கு இசையமைப்பாளர்களாம். ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு இசையமைப்பாளர் இசையமைப்பாராம். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதோடு, என்.ஜே.சரவணன் என்பவருடன் சேர்ந்து இயக்குகிறார் பாலாஜி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ம்யூட்

  • தமிழ் சேனல் தற்போது நடத்தி முடித்திருக்கும் பாடகருக்கானப் போட்டியில் வெற்றியாளராக ஒருவரை அறிவித்தது. டி.ஆர்.பி-க்காக சுமாராகப் பாடியவரையே வெற்றியாளராக அறிவித்துவிட்டார்கள் என்று பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் குவிகின்றன. குறிப்பாக, சினிமா பிரபலங்கள் பலருமே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு