அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ஹீரோ, காமெடியன், வில்லன் என ட்ரிபிள் ஆக்ஷனில் சந்தானம் நடிக்கும் படம் ‘டிக்கிலோனா’. இதில் அவருக்கு ஜோடியாக ‘நட்பே துணை’ அனாகாவும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ஷெரின் காஞ்ச்வாலாவும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் நடிக்கிறார்.
‘ப்ளைண்ட்’ எனும் கொரியன் படத்தை ‘நெற்றிக்கண்’ என்ற பெயரில் தமிழில் விக்னேஷ் சிவன் தயாரிக்க, நயன்தாரா நடித்து வருகிறார். இதன் இந்தி வெர்ஷனில் சோனம் கபூர் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவிஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் நகைச்சுவை நடிகர் விவேக். விஜய் சேதுபதியும் விவேக்கும் சேர்ந்து நடிக்கும் முதல் படம் இது. இதனை எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக இருந்த வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் என்பவர் இயக்குகிறார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடிக்கும் நயன்தாரா, படம் முடியும் வரை அசைவ உணவுகளைத் தவிர்த்து சைவ உணவு மட்டுமே சாப்பிட உள்ளாராம். தெலுங்கில் ‘ராம ராஜ்யம்’ படத்தில் சீதையாக நடித்தபோதும் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்தாராம் நயன்.
விஷாலின் ‘சக்ரா’ படத்தில் ஷ்ரத்தா கபூர் போலீஸ் கதாபாத்திரத்திலும் ரெஜினா கஸாண்ட்ரா நெகட்டிவ் ரோலிலும் நடிக்க உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, ஸ்ருஷ்டி டாங்கேவும் கமிட்டாகி உள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ‘வலிமை’ படத்தில் நிறைய கார் சேஸிங் காட்சிகள் இருக்கின்றன. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பணியாற்றிய பென் காலின்ஸ் இந்த சேஸிங் காட்சிகளை வடிவமைக்க இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ம்யூட்
வம்பு நடிகர் சபரிமலைக்கு மாலை போட்ட பிறகு, தனது நடவடிக்கையை மாற்றிக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தன் பாணியிலேயே செயல்படுகிறாராம். இதனால் நடிப்பதற்காக வம்பு தேதி கொடுத்துள்ள படத்தின் தயாரிப்பாளர், ‘அந்த காஞ்சிபுரத்தம்மன்தான் காப்பாத்தணும்’ என்று நொந்துபோய் புலம்புகிறாராம்.
வெறித்தன நடிகரின் அடுத்தப் படத்தை அவரின் அப்பாவே தயாரிப்பார் என்று பேச்சுகள் வெளிவந்த நிலையில், அந்த கால்ஷீட்டை வேறொரு பெரிய தயாரிப்பு நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டார்களாம். ‘ஸ்லீப்பர் செல்’ படத்துக்கும் இதேபோல்தான் கால்ஷீட் ஒதுக்கினார்களாம்.