அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஆண்ட்ரியா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்ட்ரியா

விஜய் படத்தில் ஆண்ட்ரியா

  • ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் வயதான தோற்றத்தில் கமலின் மனைவியாக நடிக்கிறாராம் காஜல் அகர்வால்.

  • ‘கைதி’ படத்துக்குப் பிறகு விஜய் படத்தை இயக்கும் வேலைகளில் பிஸியாகிவிட்டார் லோகேஷ் கனகராஜ். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருக்கும் இந்தப் படத்தில், ‘பேட்ட’ மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில், படத்தின் முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஆண்ட்ரியா.

  • விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்து தமிழில் வெளியான ‘96’ திரைப்படம், தற்போது சர்வானந்த் - சமந்தா நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு காதலர் தினத்தன்று இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படமான ‘மஹா’வின் படப்பிடிப்பை முடித்திருக்கும் ஹன்சிகா, தற்போது ‘குலேபகாவலி’ கல்யாண் இயக்கவிருக்கும் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில், பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் மகளுக்கு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை தீபாவளிப் பரிசாகக் கொடுத்திருக்கிறார் ஹன்சிகாவின் அம்மா!

‘சைக்கோ’ படத்தின் டீஸர் வெளியிட்டதோடு, அடுத்து இயக்கவிருக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் பணிகளை லண்டனில் தொடங்கியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். விஷால் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், லவ்லி சிங் என்பவர் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார்.

ம்யூட்

  • நம்பர் நடிகை நடித்து சமீபத்தில் வெளியான படம் `சரியாகப் போகவில்லை’ என்ற தகவல் பரவிக்கொண்டிருப்பதால், பயங்கர மூட் அவுட் ஆகியிருக்கிறாராம் நடிகை. இனி எவ்வளவு பெரிய ஹீரோவுடன் நடித்தாலும், கதையில் மிகுந்த கவனம் செலுத்தப்போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.

  • ‘நான்கெழுத்து நடிகரின் படம் வெற்றி’ என்ற செய்தி, மன்னர் நடிகரை ‘வடபோச்சே!’ என வருத்தத்தில் தள்ளியிருக்கிறது. ஏனெனில், அது அவர் நடிக்கவேண்டிய படமாம். தயாரிப்புப் பிரிவுக்கும் அவருக்குமான உரசல்களால் நடிக்க முடியாமல்போனதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம் நடிகர்.