Published:Updated:

மிஸ்டர் மியாவ்

தமிழில் கவனிக்கத்தக்க வெற்றியைப் பெற்ற அஜித்தின் ‘வேதாளம்’ படத்தை, தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து இயக்குகிறார்கள்

பிரீமியம் ஸ்டோரி

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ நிறுவனம், தொடர்ந்து படங்களைத் தயாரித்துவருகிறது. ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன், தன் உதவியாளர் விநாயக்கின் கதையையும் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரின் சகோதரியான மல்டி சாஹரையும் நடிக்கவைக்கிறார்களாம். யூத் உலகத்தைக் கொண்டாடவைக்கும் விதமாக, காதலும் காமெடியுமாகப் படத்தை உருவாக்கப் போகிறார்களாம்.

‘ராட்சசி’ படத்தில் கவனம் ஈர்த்த இயக்குநர் கௌதம் ராஜ், அடுத்து அருள்நிதிக்குக் கதை சொல்லி ஓ.கே வாங்கியிருந்தார். சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் படத்தைத் தயாரிக்க ரெடியான நிலையில், நடிகர் லாரன்ஸிடமிருந்து கௌதம் ராஜுக்கு அழைப்பு. ஏற்கெனவே கௌதம் ராஜ் அவரிடம் சொல்லிவைத்திருந்த கதை திடீரென ஓ.கே ஆக, அருள்நிதியா, லாரன்ஸா எனக் குழப்பமாகிவிட்டது. ‘லாரன்ஸ் தேதிதான் முக்கியம்’ என நண்பர்கள் சொல்ல, அடுத்து லாரன்ஸை வைத்து ஷூட்டிங்கைத் தொடங்குகிறார் கௌதம் ராஜ்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

தமிழில் கவனிக்கத்தக்க வெற்றியைப் பெற்ற அஜித்தின் ‘வேதாளம்’ படத்தை, தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து இயக்குகிறார்கள். ‘வேதாளம்’ கதையின் ஆக்‌ஷனும், தங்கச்சி சென்டிமென்ட்டும் தெலுங்கில் பிரமாதமாக வொர்க்அவுட்டாகும் என கணித்திருந்தாராம் சிரஞ்சீவி. அவர் சொன்னபடி தெலுங்குக்கு ஏற்றவிதமாகக் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றனவாம். தமிழைவிட தெலுங்கில் ‘வேதாளம்’ கதை பெரிய வெற்றிபெறும் என்கிறாராம் சிரஞ்சீவி.

‘சூரரைப் போற்று’ படத்தை அமேஸான் தளத்துக்குக் கொடுத்தபோது, அதன் வருவாயில் 5 கோடி ரூபாயை கொரோனா பணிகளுக்காக ஒதுக்கிக்கொடுத்தார் சூர்யா. தற்போது ‘ஜெய் பீம்’ படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இருளர் நலனுக்காக ஒரு கோடி ரூபாயை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியிருக்கிறார் சூர்யா. “இருளர் துயரம் குறித்துப் படம் செய்ததோடு ஒதுங்கிக்கொள்ளாமல், அவர்களின் நல்வாழ்வுக்கு உதவிசெய்து நெகிழவைத்துவிட்டீர்கள்” என ஸ்டாலின் பாராட்ட, “இன்னும் நிறைய செய்வோம் சார்…” என்றாராம் சூர்யா.

உஷ்!

காதலைச் சொல்லத் தயங்கிய இதயம் கொண்ட நடிகரின் வாரிசு, ஆக்‌ஷன் காட்சிகளை அதிகப்படுத்தச் சொல்லி இயக்குநர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறாராம். “இதெல்லாம் வளரும் நடிகர்கள் செய்கிற ஒன்றுதான்… ஆனால், காலையில் ஷூட்டிங்குக்கு வரச் சொன்னால், மதியம்தான் வருகிறார். அதை மாற்றிக்கொண்டால் போதும்” என்கிறார்கள் அக்கறையானவர்கள். #நியாயமா... நியாயமாரே?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு