அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

அஞ்சலி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சலி

படத்தின் களமாகவே மாறி நிற்கும் நீதிமன்றத்தை செட் போட ஒன்றரைக் கோடி ரூபாய்க்கும் மேல் செலவாகும்… பரவாயில்லையா சார்?

ரஜினியின் ‘அண்ணாத்த’ பலத்த விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தாலும், குடும்பரீதியாக கனெக்ட் ஆனதில் ரஜினிக்குச் சற்றே ஆறுதலாம். “இயக்குநர் சிவா என்னிடம் மூன்றுவிதமான ஒன்லைன் சொன்னார். அதில் ஃபேமிலி சென்டிமென்ட் லைனைப் பண்ணிப் பார்க்கலாம்னு நான்தான் சொன்னேன். இந்தக் காலகட்டத்துக்குக் குடும்பம், பாசம், உறவு பற்றிச் சொல்லணும்னு நினைச்சேன். பட், நம்ம கணக்கு கொஞ்சம் மிஸ்ஸாகிடுச்சு” என நெருங்கியவர்களிடம் சொன்னாராம் ரஜினி. யார் மீதாவது பழியைத் தூக்கிப்போட்டுவிட்டு எஸ்ஸாகிறவர்களுக்கு மத்தியில், ரஜினி கொடுக்கிற விளக்கத்தால் எல்லோருக்கும் ஆச்சர்யம்.

கொரோனா நெருக்கடிகளையும் கடந்து, சிவகார்த்தி கேயனின் ‘டான்’ பட ஷூட்டிங் விரைவாக முடிந்திருக்கிறது. தந்தை-மகன் இருவருக்குமான பாசப் போராட்டம்தான் படத்தின் மையக்கருவாம். இயல்பாகவே, மறைந்த தன் தந்தைமீது மிகுந்த பிரியம்கொண்ட சிவகார்த்திகேயன், சமீபத்தில் பிறந்த தன் மகனுக்கும் அப்பா பெயரையே சூட்டி அழகுபார்த்தார். ‘டான்’ படம் சிவாவுக்கு மிக நெருக்கமான படமாக மாறியதற்கும் இந்தப் பாசம்தான் காரணமாம்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

இந்திய அளவில் கவனம் பெற்றிருக்கிறது சூர்யாவின் ‘ஜெய் பீம்.’ படத்தில் இடம்பெறும் நீதிமன்றத்தை அப்படியே அந்தக் காலகட்டத்தின் அச்சு அசல் பதிவாக செட் போட்ட கலை இயக்குநர் கதிருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் இடம்பெறும் நீதிமன்றத்தை செட் போட்டவரும் இவரேதான். ‘ஜெய் பீம்’ படத்தின் கதையைக் கேட்ட கதிர், “படத்தின் களமாகவே மாறி நிற்கும் நீதிமன்றத்தை செட் போட ஒன்றரைக் கோடி ரூபாய்க்கும் மேல் செலவாகும்… பரவாயில்லையா சார்?” எனக் கேட்க, எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே ஓகே சொன்னாராம் சூர்யா.

பொன்ராம் இயக்கத்தில் தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் வெளியான ‘எம்.ஜி.ஆர் மகன்’ படம், சசிகுமாருக்குத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓடிடி தளத்தில் உரிய கவனம் கிடைக்காததால், படம் ரிலீஸானதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. அதனால், எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தைத் திரைக்குக் கொண்டுவருவதில் உறுதியாகயிருக்கிறார் சசிகுமார்.

உஷ்…

‘1.5 சி’ சம்பளம் வாங்கிவந்த சமர்த்தான நாயகி, திடீரென மூன்று விரல்களைக் காட்டிச் சம்பளம் கேட்கிறாராம். படம் ஹிட்டானால் சம்பளத்தை உயர்த்துவது சகஜம்தான். அம்மணிக்கு அப்படி திடீர் ஹிட்டடித்த படம் என்ன எனப் பலரும் யோசிக்க, ‘திருமண முறிவில் ஏற்பட்ட பரபரப்பு, படம் ஹிட் அடிக்க உதவும்’ என்கிறார்களாம் மீடியேட்டர்கள். #செல்ஃபி புள்ள!