அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஓவியா
பிரீமியம் ஸ்டோரி
News
ஓவியா

தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார், நித்யா மேனன்.

* கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான ‘லவ் மாக்டெய்ல்’ படத்தை ‘குர்துண்ட சீதாக்காலம்’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். இதில் சத்யதேவ் - தமன்னா ஜோடியாக நடிக்கின்றனர். இதில் கேமியோ ரோலில் நடிக்கிறார் மேகா ஆகாஷ். இந்தியில் சல்மான் கானுடன் ‘ராதே’, தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, தெலுங்கில் ‘மனு சரித்ரா’ எனப் பல மொழிகளில் வித்தை காட்டுகிறார் மேகா!

மேகா ஆகாஷ் - காஷ்மீரா - நித்யா மேனன்
மேகா ஆகாஷ் - காஷ்மீரா - நித்யா மேனன்

* ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை காஷ்மீரா. இந்தப் படத்துக்குப் பிறகு, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இப்போது புதிய படம் ஒன்றிலும் கமிட்டாகியிருக்கிறார் காஷ்மீரா. படத்தின் பெயர், ‘வசந்த முல்லை.’ ரமணன் புருஷோத்தமா எனும் அறிமுக இயக்குநர் இயக்கும் இந்தப் படத்தைத் தயாரித்து, நடிக்கிறார் பாபி சிம்ஹா.

* தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார், நித்யா மேனன். அசோக் செல்வனோடு ‘நின்னிலா நின்னிலா’ தெலுங்குப் படம், ‘கொளம்பி’, ‘ஆரம் திருகல்பனா’ என இரு மலையாளப் படங்கள், ஸ்ரேயாவுடன் ‘கமணம்’ மல்டிலிங்குவல் படம் ஆகியவை நித்யா வசம் இருக்கின்றன. தற்போது, அறிமுக இயக்குநர் இந்து இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘19 (1)(a)’ என்ற மலையாளப் படத்தில் நடிக்கவிருக்கிறார். இது விஜய் சேதுபதி நடிக்கும் இரண்டாவது மலையாளப் படம்.

ஓவியா
ஓவியா
ஓவியா
ஓவியா

* `பிக் பாஸ்’ முதல் சீஸனில் ஆரவ்வைக் காதலிப்பதாக ஓவியா கூறினார். ஆனால், ஆரவ் அதை மறுத்துவிட்டார். நிகழ்ச்சி முடிந்த பிறகும் இந்த இருவரைப் பற்றி கிசுகிசுக்கள் கிளம்பின. சமீபத்தில், ஆரவ்வுக்கு ராஹி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதில் ஓவியாவைத் தவிர மற்ற பிக் பாஸ் நண்பர்கள் கலந்துகொண்டனர். இன்ஸ்டாகிராம் லைவ் வந்த ஓவியாவிடம் ஆரவ் திருமணம் பற்றி ஒருவர் கேட்க, “நான் கேரளாவில் இருந்ததால், ஆரவ்வின் திருமணத்துக்கு வர முடியவில்லை. எனக்கும் ஆரவ்வுக்கும் இடையில் என்ன இருந்ததோ அது முடிந்துவிட்டது. அவருக்கு அழகான வாழ்க்கை அமைந்திருக்கிறது. இனி, இது பற்றிக் கேட்காதீர்கள்’’ என்று பதிலளித்திருக்கிறார்.