Published:Updated:

மிஸ்டர் மியாவ்

கீர்த்தி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
கீர்த்தி சுரேஷ்

நாம் எப்போது வேண்டுமானாலும் இணைந்து படம் பண்ணலாம். எப்போதும்போல் உற்சாகமாக இருங்கள்

மிஸ்டர் மியாவ்

நாம் எப்போது வேண்டுமானாலும் இணைந்து படம் பண்ணலாம். எப்போதும்போல் உற்சாகமாக இருங்கள்

Published:Updated:
கீர்த்தி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
கீர்த்தி சுரேஷ்

நடிகர் விஷ்ணு விஷாலின் பிசினஸ், கோடம்பாக்கத்தையே நிமிர்ந்து பார்க்கவைத்திருக்கிறது. அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘FIR’ படத்தை ஓடிடி தளத்தில் 30 கோடி ரூபாய்க்குக் கேட்டார்கள். படம் சிறப்பாக வந்திருப்பதால் தியேட்டரில்தான் ரிலீஸ் என்பதில் விஷ்ணு விஷால் உறுதியாக இருக்கிறார். ‘தியேட்டர் ரிலீஸுக்குப் பிறகு’ எனச் சொல்லி அமேசான் நிறுவனம் ஓடிடி வெளியீட்டு உரிமையைக் கணிசமான தொகைக்கு வாங்கியிருக்கிறது. இதற்கிடையில் ஹிந்தி ரைட்ஸ் மட்டுமே 8 கோடி ரூபாய்க்குப் போக, சாட்டிலைட்டுக்கும் பலத்த போட்டி. 30 கோடி ரூபாயைத் தொடுகிற அளவுக்கு விஷ்ணு விஷால் படத்துக்கான பிசினஸ் உயர்ந்திருப்பது பலரையும் திகைக்கவைத்திருக்கிறது.

‘அண்ணாத்த’ படம் பலவிதமான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், திடீரென இயக்குநர் சிவாவுக்கு போன் செய்திருக்கிறார் அஜித். “நாம் எப்போது வேண்டுமானாலும் இணைந்து படம் பண்ணலாம். எப்போதும்போல் உற்சாகமாக இருங்கள்” என அஜித் சொல்ல, நெகிழ்ந்துபோயிருக்கிறார் சிவா. அடுத்து சூர்யா படத்தை இயக்கத் தயாராகிவரும் நிலையில், அஜித்தின் போன் பேச்சு சிவாவைக் கூடுதல் உற்சாகமாக்கியிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

குஜராத்தி வரவான பூஜா ஜவேரிக்குத் தமிழில் சாதிக்கத்தான் அவ்வளவு ஆசையாம். இத்தனைக்கும் ‘பாம் போலேநாத்’ என்கிற தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி, அங்கே அடுத்தடுத்து கவனிக்கத்தக்க படங்களைச் செய்துவருகிறார். தமிழில் ‘எக்கோ’, ‘ருக்குமணி வண்டி வருது’ படங்களில் தற்போது நடித்துவரும் பூஜா ஜவேரிக்கு இயக்குநர் அட்லியின் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற பெருங்கனவாம். அட்லியின் ‘ராஜா ராணி’ படத்தைப் பலமுறை பார்த்துச் சிலிர்த்து, அட்லியின் ரசிகையாகவே மாறிவிட்டாராம்.

‘ஜெய் பீம்’ செம ஹிட்டடித்திருக்கும் நிலையில், அடுத்து ஞானவேல் யாரைவைத்துப் படம் இயக்கப்போகிறார் என்கிற கேள்வி பெரிதாகப் பரபரக்கிறது. ரஜினி தொடங்கி சிவகார்த்திகேயன் வரை பலரும் அவருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கும் நிலையில், மிக நிதானமாக அடுத்த கதையை ரெடி செய்துவருகிறார் ஞானவேல். சமூகம் சார்ந்த, அதேநேரம் ஹீரோயிசம் கலந்த கதையாக எழுத வேண்டும் என்பதுதான் அவர் எண்ணமாம். ‘தயாரிக்கத் தயார்’ எனப் பல நிறுவனங்கள் அட்வான்ஸ் நீட்டினாலும், இப்போதைக்குச் சர்வ அமைதிகாக்கிறார் ஞானவேல்.

வில்லத்தனத்தையே ஹீரோயிசமாகக்கொண்ட ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வெற்றி ஏற்படுத்திய நம்பிக்கையில்தான், ‘குருப்’ படத்தைத் தானே தயாரித்து, அகில இந்திய அளவிலான படமாக ரிலீஸ் செய்தார் துல்கர் சல்மான். படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் வசூலில் சக்கைபோடு போடுகிறது. ‘வில்லத்தனமான பாத்திரங்களை மக்கள் விரும்பத் தொடங்கிவிட்டார்கள்’ என்கிற இன்றைய ரசனையின் அடிப்படையிலேயே படத்தின் வெற்றியும் அமைய, துல்கருக்குப் பெரிய சந்தோஷமாம்!

உஷ்…

தன்னுடைய கதையை உல்டா அடித்து, ‘ஆனந்தமான’ இயக்குநர் தெலுங்கு நடிகருக்குப் படம் பண்ணுவதாகப் பலரிடமும் புகார் சொல்லிவருகிறார் இயக்குநரும், அரசியல் கட்சித் தலைவருமான அண்ணன்காரர். “இந்தக் கதைக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது படம் வெளிவரும்போது தெரியும்” என பதில் சொல்கிறார் ‘ஆனந்தமான’ இயக்குநர். விரைவில் பஞ்சாயத்தாம். #சண்டைக்கோழிகளா மாறாம இருக்க வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism