அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஜான்வி கபூர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜான்வி கபூர்

‘உடன்பிறப்பே’ படம் ரிலீஸாகி ஒரு வருடத்தைத் தாண்டியும், அடுத்து எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் அமைதி காத்துவந்தார் ஜோதிகா.

‘தர்பார்’ படத்தின்போதே லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரனிடம் ‘நாம் மீண்டும் படம் பண்ணலாம்’ என உத்தரவாதம் கொடுத்திருந்தாராம் ரஜினி. இப்போது லைகா நிறுவனத்துக்கு ஒரே நேரத்தில் இரு படங்களுக்குத் தேதி கொடுத்திருக்கிறார். அடுத்த வருடத்துக்குள் இரு படங்களையும் முடிக்க டார்கெட் முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.

கார்த்தி நடித்த ‘தேவ்’ படத்தின் மூலம் கையைச் சுட்டுக்கொண்ட ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், சமீபத்தில் ரிலீஸான ‘சர்தார்’ மூலமாக வகையாக கல்லாகட்டியிருக்கிறது. விநியோகஸ்தர்களுக்கான நஷ்டத்தைச் சமீபத்தில் சரிக்கட்டியிருக்கும் தயாரிப்பாளர் லக்‌ஷ்மண், அடுத்து சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காரி’ படத்தை ரிலீஸ் செய்கிறார். ஜல்லிக்கட்டு பின்னணியில் பிரமாண்டப் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது லோகேஷ் கனகராஜ் என்பது உறுதியான செய்தி. அதைத் தயாரிக்கப்போவது யார் என்பது இப்போது வரை சஸ்பென்ஸாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் தமிழ்நாடு ரைட்ஸை, தயாரிப்பாளர் லலித் கையில் விஜய் ஒப்படைத்திருப்பதால், அடுத்த படத்தைத் தயாரிக்கப்போவதும் அவரேதான் என்பது உறுதியாகிவிட்டது. விஜய்யின் படங்களுக்கு, சமீபகாலமாக டிஜிட்டல் ரைட்ஸ் பேரம் எக்கச்சக்கமாக எகிறுவதால், லலித்திடம் அதையே சம்பளமாகப் பேசுகிற திட்டத்தில் இருக்கிறாராம் விஜய்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

‘உடன்பிறப்பே’ படம் ரிலீஸாகி ஒரு வருடத்தைத் தாண்டியும், அடுத்து எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் அமைதி காத்துவந்தார் ஜோதிகா. லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான வசனகர்த்தா பொன்.பார்த்திபன் ரெடி செய்திருந்த கதையை, தயாரித்து நடிக்கத் திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் கேமரா மேன் ரவிவர்மனும் ஒரு கதையைச் சொல்லி ஜோதிகாவிடம் ஓகே வாங்கி வைத்திருந்தார். குழந்தைகளின் படிப்பே முக்கியம் எனச் சொல்லி நடிப்பைத் தள்ளிப்போட்டிருந்த ஜோதிகா, இப்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். 2023-ல் மீண்டும் நடிப்பில் ஜோ பிஸியாகிவிடுவார் என்கிறார்கள்!

உஷ்...

கொடிகட்டிப் பறக்கும் யூத் ஹீரோக்களையே கிலியில் ஆழ்த்தியிருக்கிறதாம் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் யூத் இயக்குநரின் காதல் படம். ‘இந்தப் பையன் ஜெயிச்சா நீங்கல்லாம் காலி’ எனக் குடுகுடுப்பை அடித்து அசுர நடிகர் தொடங்கி வருத்தப்படாத நடிகர் வரை தூக்கத்தைக் கெடுத்து வருகிறார்கள் பலரும்!